தேர்தலின் போது பொதுக் கூட்டணி மற்றும் பொதுச் சின்னத்தில் போட்டியிடுமாறு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர், ரணிலுக்கு அழுத்தம்

465

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, சிலர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலின் போது பொதுக் கூட்டணி மற்றும் பொதுச் சின்னத்தில் போட்டியிடுமாறு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர், ரணிலுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் உள்ள ராஜபக்ஷவினருக்கு எதிரான அமைச்சர்களுடன் எதிரணி அரசியல்கட்சிகள், வெகுஜன அமைப்புகள் சிலவும் ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

சஜித் பிரேமதாசவை பிரதித் தலைவராக நியமிக்கும் யோசனை முன்வைக்கப்படும் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும் செயற்குழுக் கூட்டத்திலேயே மேற்படி யோசனையையும் நிறைவேற்றி கொள்ளுமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.

விரிவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சஜித் பிரேமதாச விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க இணங்கிய அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளில் உள்ளவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

அத்துடன் பொதுக் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஊவா தேர்தல் முடிந்தவுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் இணக்கம் வெளியிட்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள தலைமைத்துவ நெருக்கடி காரணமாக அவரும் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE