தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஆராய்வு

459

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று திருகோணமலை தபால் நிலைய வீதியில் அமைந்துள்ள குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.
32772bab658bc8f5c029a7ba9d64ee40

காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இக்கூட்டம் மாலை 6.20 மணிக்கு நிறைவடைந்தது.

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.  இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டார்.

கூட்டம் நிறைவடைந்தததும் இது பற்றி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும்.

இதில் தமிழ் மக்கள் அதிக பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இப்பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

தமிழ் மக்களின் வெற்றிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மிகவும் முக்கியமான பங்கு உண்டு.

வேட்பாளர்கள் தெரிவு. புதியவர்களுக்கு இடம் கொடுத்தல், மற்றயை கட்சிகளுடனான பிரதிநிதிகளின் பங்கீடு என்பவை பற்றி இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

ஒவ்வவொரு மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பிரதிநிதிகள் மிகவும் விரிவாக எடுத:துக் கூறியிருந்தார்கள். இவைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு தேர்தல் வியூகங்கள் அமைக்கப்படும். தமிழ் மக்களின் உடனடித் தீர்வு பற்றியும் சர்வதேசம் எதர்பர்ர்ப்பு பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதாக எம். சுமந்திரன் குறிப்பிட்டார்.

SHARE