தேவாலயங்கள் மீது தாக்குதல் நடைபெறலாம்.

581

அலுத்கமவில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைப் போன்று கிறீஸ்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்த ஒரு குழு முயற்சிப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச மற்றும் நோர்வே அரசின் கூட்டுத் தயாரிப்பான பொதுபல சேனா என்ற பௌத்த அடிப்படைவாத அமைப்பே இஸ்லாமியத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திவருகிறது. தேவால யங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையி முழுவதும் இடம்பெறும் பல்தேசிய வியாபாரக் கொள்ளையை மூடி மறைப்பதற்காக சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீது இலங்கை இனக்கொலை அரசு தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

z_p14-speedy3

இத்தாக்குதல்கள் அரச படைகளின் துணையுடனேயா நடத்தப்பட்டன. பிற்போக்கு முஸ்லிம் தலைமைகள் தமது தேசிய இனத்தைச் சார்ந்த மக்களையே காட்டிக்கொடுக்க மக்களின் உடமைகள் சூறையாடப்பட்டன.
இன்று கிறீஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி இலங்கை அரசு மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி சிக்கல்களிலிருந்து தப்பிக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதா எனச் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

SHARE