தொகுப்பாளினி டிடி-யின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

89

 

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. காஃபி வித் டிடி எனும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் எந்த ஒரு நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கவில்லை. உடல்நிலை காரணமாக தான் அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல் இருக்கிறார்.

முன்னணி நட்சத்திரங்களின் இசை வெளியிட்டு விழா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

சொத்து மதிப்பு
தொகுப்பாளினியாக மட்டுமின்றி நடிகையாகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ஜோஷ்வா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் டிடி. மேலும் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சின்னத்திரையில் டாப் நட்சத்திரமாக இருக்கும் டிடி-யின் சொத்து மதிப்பு ரூ. 5 கோடிக்கும் மேல் இருக்குமாம். மேலும் இவர் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 4 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE