மன்னார் வளைகுடா கடற்பரப்பில் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில் இன்று மாலை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே குறித்த எட்டு இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ம் திகதி...
நூருல் ஹுதா உமர்
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பினால் 2014 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ச்சியாக 10வது வருடமாகவும் நடைபெற உள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் மூத்த உதைபந்தாட்டப் போட்டியானது 10 வது ஆண்டை முன்னிட்டு பாகிஸ்தான் - இலங்கை நட்புறவு கிண்ணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் 24 முன்னணி அணிகள் பங்குபற்ற உள்ளதோடு, இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் வீரர்களும் அந்த விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றியுள்ளனர்.
கொழும்பு 13,...
பாறுக் ஷிஹான்
அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேசத்தின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு இன்று நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாபுதீன் தலைமையில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆதம்பாவா , அஸ்ரப் தாஹீர் ஆகியோர் கலந்து கொண்டு கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
விசேட அதிதிகளாக, நிந்தவூர் பிரதேச செயலாளர்...
2040 ஆம் ஆண்டளவிலே இலங்கை நாடானது ஒரு சீன காலனித்துவத்திற்குள் கொண்டுவரப்படுகின்ற ஒரு சூழலே உருவாக்கப்படும்.
Thinappuyal News -
பூகோள சகதிக்குள் சிக்கியிருக்கின்ற இலங்கை
இன்றைய பூகோள அரசியல் நிலைமை என்பது மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது என்று தான் கூறவேண்டும். காரணம் என்னவென்றால் ஒரு நாட்டை கடன் சுமைக்குள்ளாக்கிவிட்டு நாடு மீள் எழும்பாத வகையிலே பல்வேறு அழுத்தங்களை கொடுக்கின்ற ஒரு சூழல் தான் தற்பொழுது இலங்கை தேசத்திலே உருவாகியிருக்கின்றது. இதனை நாம் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது நாங்கள் அவ்வாறு செய்திருக்கின்றோமா என்றால்...
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம்
Thinappuyal News -
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான போதைப் பொருள் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம் 2025.01.10 இன்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே . மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் வட கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான உளவள ஆலோசனை துறை இணைப்பாளர் எம்.எம்.ஜீ.வி.ரஸாத் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
இந்த...
Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் அரிய வகைப் புலியின் உடலம் இன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டள்ளது.
THE FISHING CAT என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) என அழைக்கப்படுவதுடன் மக்கள் வாழும் பகுதியில் இவ்வாறான அரிய வகை புலிகள் காடுகளில் இருந்து உள் நுழைந்து மீன் உட்பட...
தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம்
Thinappuyal News -
தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எந்தவிதத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தற்போது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரிமிருந்து அனுமதிப்பத்திரத்துடன் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து துப்பாக்கிகளையும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னதாக ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் தம்வசம் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை திருப்பி...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீனப் பயணம் இரு நாடுகளுக்கும் மிக முக்கியமான பயணமாக இருக்கும்
Thinappuyal News -
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீனப் பயணம் இரு நாடுகளுக்கும் மிக முக்கியமான பயணமாக இருக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது.
சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவுக்கு 2025, ஜனவரி 14 முதல் 17 வரையில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அந்நாட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இலங்கையில் புதிய ஜனாதிபதி பதவியேற்ற பிறகு...
இலங்கைக்கு பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிட்டுள்ளது.
அதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ள வாகனங்களுக்கு 200%-300% வரி விதிக்கப்பட்ட உள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்புத் துறையின் பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவத்தில், அத்துறையின் உதவி பராமரிப்பு நிர்வாகி உட்பட மூன்று பேரை பணிநீக்கம் செய்ய சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன முடிவு செய்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்திய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சந்தேகநபர்களை சபாநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள்
கடந்த...