வைத்திய பணிப்பாளரின் உரிய  அனுமதி இன்றி வைத்தியசாலையில் அத்துமீறி  உட்பிரவேசித்த இருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் திங்கட்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.இதன்போது குறித்த வைத்தியசாலையில் இருவர்  அனுமதி இன்றி உட்பிரவேசித்ததாக அங்கு பாதுகாப்பு பணிக்கு பொறுப்பான அதிகாரியினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில்  திங்கட்கிழமை (23) மாலை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த   முறைப்பாட்டிற்கமைய குறித்த இருவரையும் கைது...
  அஸ்வின் தன்னுடைய நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாடிய போது யாரும் நினைத்திருக்கவில்லை இன்னும் மேலதிகமாக 6 டெஸ்ட் போட்டிகள் தான் விளையாடுவார் என்று ,அது மாத்திரமல்லாமல் அஸ்வின் தன்னுடைய இறுதிக் காலத்தில் இருக்கிறார் என்று தன்னுடைய நூறாவது டிரஸ் போட்டியை விளையாடுகின்ற போது ஒரு வார்த்தை கூட யாரும் உச்சரித்திக்கவில்லை . ஆனால் நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடர் ஒட்டுமொத்தமான கேரியரையும் புரட்டி போட்டு விட்டது என்று சொல்லலாம். உள்ளூரிலே அடைந்த...
  விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றைய நிலை யார் காரணம்  கிழக்கில் வென்ற தமிழ்தேசியம் வடக்கில் தோற்றது ஏன்? உள்ளுராட்சி மன்றங்களை இலக்காக கொண்டு கட்சிகள் தம்மை பலப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டதொன்று. அதனை சீர்குழைப்பதற்கு 2001 – 2023 வரையான காலப்பகுதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ் நெசனல் அலைன்ஸ் (TNA) சனிக்கிழமை 14 ஜனவரி...
ஆராய்ச்சி என்கிற பெயரில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழர் தாயகப் பிரதேசங்களை அபகரிக்கும் நிலைமைகள் தற்போது உருவாகியுள்ளது. இதனை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் பௌத்த தேரர்களை வைத்தே காய்நகர்த்தி வருகிறார். கடந்த காலங்களிலும் பொதுபல சேனா, ராவண பலய போன்ற அமைப்புக்களினூடாக இவ்வாறான செயற்பாடுகள் முன்னகர்த்தப்பட்டது. அண்மையில் கிழக்கு மாகாணத்தில் அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரர் என்பவர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொண்டதுடன்,...
  பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டத்திற்கு செயலூக்கத்துடன் ஆதரவளிப்போம்! ஊதியம், வேலை வாய்ப்பு மற்றும் இலவசக் கல்வியையும் வென்றெடுக்க ஒன்றிணைந்து போராடுவோம்! டிசம்பர் 02 அன்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் பத்தரமுல்லையில் கல்வி அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமார் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தாக்குவதற்கு பொலிஸாரை வழிநடத்தியது. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆசிரியர்களை அடித்து உதைத்த...
  புலிகளின்வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்தகோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். , புலிகளின் முக்கியத்தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர்வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமானசிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின்சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட,புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது. களத்தில்இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின்இலட்சியமான தமிழீழத் தாயகம்...
  திருகோணமலை மீடியா போரத்தின் 5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மீடியா  போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக விருது - 2024 வழங்கும் விழாவும், பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வும்  கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் எதிர்வரும் (25) ஆம் திகதி மாலை 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. போரத்தின் தலைவர் எச்.எம்.ஹலால்தீன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். மேலும்,...
சுயநல அடிப்படையில் சுமந்திரன் வகுத்த சூழ்ச்சித் திட்டத்தால், வடமாகாணத்தில் குறைந்த பட்சம் 5 ஆசனங்களை தமிழரசுக்கட்சி இழந்துள்ளது. சுமந்திரனின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தேர்தலுக்கான வேட்பாளர் குழு அமைக்கப்பட்டது. இதற்கு மத்தியகுழுவிலுள்ள சுமந்திரனின் பெரும்பான்மை கையாட்கள் ஆதரித்தனர். அந்த 8 வேட்பாளர்களும் சுமந்திரனுக்கு எப்படியாவது வாக்குச் சேர்த்து வெற்றி பெறச் செய்வதற்காக உழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது தத்தமது விருப்பு வாக்கை அளிப்பதுடன், சுமந்திரனுக்கும் விருப்பு வாக்குகளைச் சேர்ப்பதே சுயநலத்திட்டமாக...
  மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா (பிறப்பு: அக்டோபர் 27, 1942) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.  இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. இவர் யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார். வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். சேனாதிராசா இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார். இலங்கைத்...
  சிங்கப்பூரில் நேற்று (12) நடைபெற்ற உலக செஸ் சம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று சாதனை படைத்தார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ். வெற்றிக்கான நகர்த்தலை முடித்ததும் குகேஷின் கண்களில் கண்ணீர் வடிந்தது. நொடிப்பொழுதில் அவர், போர்டு முன் தலை சாய்ந்தார். இதன் பின்னர் போட்டி நடைபெற்ற அறையில் இருந்து வெளியே வந்த அவர், அங்கு காத்திருந்த தனது...