ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் பூர்த்தியாகிறது.
அரசியல் அரங்கில் எதிர்பார்த்தவைகள் சில நடந்த போதிலும் எதிர்பாராதவைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆளும் கட்சி உறுதியான அரசாங்கமாக இருந்தாலும் பலமான எதிர்க்கட்சி அவசியம் என்பது ஜனநாயக விழுமியங்களில் ஒன்றாகும். இலங்கையில் நடந்த இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அந்த தேர்தலிலே...
தமிழீழம் என்ற கொள்கையிலிருந்து நான் விலகினால் என்னை என் மெய்ப்பாதுகாவலர்களே சுடலாம்”-தேசியத் தலைவர் மேதகு
Thinappuyal News -
தமிழீழம் என்ற கொள்கையிலிருந்து நான் விலகினால் என்னை என் மெய்ப்பாதுகாவலர்களே சுடலாம்” என்று உறுதியுடன் கூறி தமிழீழம் என்ற ஒற்றைக் கனவுடனேயே வாழ்ந்து தமிழ் மக்களின் மனதில் இறையாகக் குடிகொண்டு நிற்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்களே
வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுக்களின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தினதும் அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தன்னியல்பிலேயே தானியங்கியாகத் தொடர்ந்து மேற்கொள்ளவல்லது. சிங்கள பௌத்த பேரினவாதம் எப்போதும் தனது பேரின வெறியில் பரிணாம வளர்ச்சி கண்டே வந்துள்ளது. மேற்குலகின் போக்கிரித்தனத்தால் உருவான நல்லிணக்கப் போர்வையைப் போர்த்திச் சிங்கள பௌத்த பேரின வெறியிலிருந்து...
இலங்கையர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர், அவை உடனடி கவனம் தேவை. உரையாடல் மற்றும் நடவடிக்கைக்கு உதவும். முக்கிய நீதி மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக 10 விடையங்கள் கலந்துரையாடப்பட்டது. அவையாவன.
1. PTA ஐ ரத்து செய்யவும் & PTA பயன்பாடு மீதான உடனடி தடை
2. MMDA ( முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து) திருத்தம்.
3. உண்மை, நீதி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி.
4. ஈஸ்டர் ஞாயிறு...
(பாறுக் ஷிஹான்)
தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும் இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (12) இரவு 7.30 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது தமது...
பிரபல பின்னணிப் பாடகர், புல்லாங்குழல் கலைஞர் அருண்மொழி அவர்களின் பிறந்தநாள் இன்று….
Thinappuyal News -
மல்லிக மொட்டு.. மனசை தொட்டு.. ராஜாவின் செல்ல பிள்ளைக்கு இன்று ஹேப்பி பர்த்டே!
ஒரு இசையமைப்பாளர் போலவே இசைக்கருவிகளை வாசிப்பவருக்கும் புகழ் சேர்ந்துள்ளது என்றால், அது அருண்மொழிக்குத்தான்!! சிறந்த புல்லாங்குழல் இசைக்கலைஞர்... பிரபல பாடகர்... இளையராஜாவின்செல்லப்பிள்ளை!
80'களின் இறுதியில் தொடங்கியது அந்த மெல்லிய பூங்காற்று... 90களில் றெக்கை கட்டி பறந்தது தவழ்ந்தது இசை வானில்!! பொதுவாக பாடகர்களுக்கு இளையராஜா நோட்ஸ் எழுதி தந்து பிறகு பாட வைப்பதுதான் பழக்கம். ஆனால்...
2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர்
Thinappuyal News -
2025 ஆம் ஆண்டிற்கான முழுமையான பள்ளி சீருடைத் தேவையை வழங்கியதற்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டிற்கான நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பிரிவெனாவிலும் உள்ள சிறுவர்களுக்கு சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு அரசாங்கம் தனது நன்றியைத் தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
சீன அரசாங்கத்திடமிருந்து...
சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷலுக்கு சமூக விஞ்ஞான “சாஹித்ய மாகாண விருது” வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
Thinappuyal News -
.
மட்டு.துஷாரா
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டு மாகாண இலக்கிய விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் சமூக விஞ்ஞானம் (ஆயுள்வேதம்) "சாஹித்ய மாகாண விருது" வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க தலைமையில் இன்று (11) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இவ்விழாவின்போது கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீலினால் பொன்னாடை...
தேங்காய் உற்பத்தி வீழ்ச்சிக்கு செய்கையாளர்களின் பராமரிப்பு இன்மையும் ஒரு காரணம் தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பதில் பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன்
இன்றைய தினம் கிளிநொச்சியில் ஊடக நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில் தேங்காய் விலை அதிகரிப்புக்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன.பசளை விநியோகம் பெறுகின்றது. தென்னைக்கு ஒவ்வொரு வருடமும் பசளையிட வேண்டும் இரசாயன பசளை கடந்த...
கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரின் விசேட பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடத்தில் சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர் துறைநீலாவணை பகுதியில் வைத்து கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உட்பட ஒரு தொகை கேரளா கஞ்சா கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் யாவும்...
வடக்கு கிழக்கு சிங்கள மயமாக்கல் தொடர்கிறது ஆயுதக் கட்சிகள் ஓரம்கட்டப்படுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைத்த துரோகிகளை களைபுடுங்கவேண்டும்
Thinappuyal News -
வடக்கு கிழக்கு சிங்கள மயமாக்கல் தொடர்கிறது ஆயுதக் கட்சிகள் ஓரம்கட்டப்படுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைத்த துரோகிகளை களைபுடுங்கவேண்டும்
இல்லையேல் வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கலை தடுக்க முடியாது தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்த எமது தினப்புயல் ஊடக நிறுவனம் கடந்த 8 மாதகாலமாக திட்டமிட்டு முடக்கப்பட்டது
மீண்டும் தேசியத்தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தமிழ் தரப்பு ஒன்றினைந்து அவசியம் தமிழரின் வாக்குகளை சிதைக்க போலி தேசிய...