சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட் உறவுகளால் வடக்கு கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளால் மன்னாரில் ஏற்பாடுசெய்யப்பட்ட போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பிரசார செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான காண்டீபன் மற்றும் மன்னார் மாவட்ட செயலாளர் விக்ரர் தற்குரூஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
          கல்முனை மாநகர வர்த்தக நிலையங்களின் வர்த்தக விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்காக கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரை  (LCD Digital Advertisement Board) செவ்வாய்க்கிழமை (10) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் மற்றும் கல்முனை வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எம். சித்தீக் உட்பட...
திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் என கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த  தேசிய காங்கிரஸின் தலைவரும்  முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்   சட்டத்தரணி  எம்.எம்.எம். முஅஸ்ஸம்  சகிதம்  இன்று மனு ஒன்றினை கைளித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட...
    1.டாலர் விலை 287. பங்கு சந்தை சாதனைகள் கலைக்கிறது. ஏற்றுமதி 4.4% அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை 22% உயர்ந்துள்ளது.  2 .ஜனாதிபதியின் உணவில் சொகுசு இல்லை. வெளிநாடுகளில் இருந்து விசேஷ இறைச்சி அல்லது மீன் இல்லை. ஹெலிகாப்டர் பயணங்கள் இல்லை. VVIP பாதுகாப்பு குழுவும் இல்லை. திருப்பதி பயணம் இல்லை.  3 ஜனாதிபதி மனைவிக்கு சிறப்பு சலுகைகள் இல்லை. பாதுகாப்பு குழு இல்லை. வீட்டை சுத்தம் செய்ய போலீசும்...
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் ஒன்றான சாய்ந்தமருது  வொலிவேரியன் கிராம கர்ப்பிணி தாய்மார்களுக்கு  பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள்  வழங்கி வைக்கும் நிகழ்வு  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.கண்டி மனிதாபிமான அமைப்பின் அனுசரனையுடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம் எம் ஆஷிக், கண்டி மனிதாபிமான...
  நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் அவரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  
  இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம புரவலர் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே பிரதான காரணியாக காணப்படுவதாக விசேட வைத்தியர் டொக்டர் சஞ்சய் ஹெயன்துடுவ தெரிவித்துள்ளார். “நம் நாட்டில் சுமார் 10% பேருக்கு சிறுநீரக நோய் உள்ளது. உண்மையில் நோய் ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளன. இந்த நோய்களை தடுப்பதில்...
  வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் 70 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாபாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று (28) தெரிவித்தனர். வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்ட போது அப்பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் வைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாபா விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதன்போது, குறித்த கடையில் இருந்து...
  இலங்கையில் தொழிலாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக, “2022 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக 8.54 மில்லியனாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.40 மில்லியனாகக் குறைவடைந்துள்ளது. தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2022 ஆண்டில் 49.8 சதவீதத்திலிருந்து 2023 ஆண்டில் 48.6 சதவீதமாக குறைந்துள்ளது. வேலையின்மை விகிதம் வேலையற்ற மக்கள் தொகை மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு...
  ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு...