நைஜீரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இதுவரை 12 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் கூட்டிய பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது நைஜீரியாவின் ஒருமைப்பாட்டையும், ஸ்திரதன்மையையும் போஹா ஹரம் குறிவைத்துள்ளது. எனவே மேற்கு ஆப்ரிகாவில் அல்-கொய்தாவுக்கு பொருளாதார தடைகளை தொடர்ந்து விதிப்பது அவசியம் என சர்வதேச நாடுகளை கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
தற்போது இயக்குனர் கௌதம் மேனன், அஜித் நடிக்கும் படத்தில் பிஸியாக இருக்கிறார் என்பது நமக்கு தெரியும். இப்படத்தை தொடங்குவதற்கு முன்பே கௌதம் மேனன், சிம்புவை வைத்து ஒரு படத்தை நீண்டநாட்களாக எடுத்து வருகிறார்.  இந்தப் படத்திற்கு முதலில் “சட்டென்று மாறுது வானிலை” என்று பெயர் வைத்ததாக கூறப்பட்டது. இது வாரணம் ஆயிரம் படத்தில் வரும் பாடலில் இடம் பெறும் பிரபலமான வரியாகும். இந்தத் தலைப்பை ஏற்கெனவே வேறு ஒருவர் பதிவு செய்துள்ளதால்...
தற்போது அஞ்சான் படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக வெங்கட் பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது நமக்கு தெரியும். இந்தப் படத்தில்தான் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாராவும், எமி ஜாக்சனும் நடிக்கின்றனர். இதில் இரண்டு நாயகி மட்டும் கிடையாதாம். இப்போது மூன்றாவதாக ஒரு நாயகியும் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, மூன்றாவது நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவிருக்கிறாராம். இதற்காக ஸ்ரீதிவ்யாவுக்கு ரூ.40 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தற்போது தமிழ் திரைப்பட உலகில் முன்னணி...
ஜெய் நடித்த வடகறி படத்தில் சன்னிலியோன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்நிலையில் சன்னிலியோன் மற்றொரு தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சம்மதம் தெரிவித்திருக்கிறார். விமல், சூரி மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இப்படத்தினை கண்ணன் இயக்கி வருகிறார். இவர், ஏற்கெனவே ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை...
  இயக்குனர் மிஷ்கின் தற்போது பாலா தயாரிப்பில் ’பிசாசு’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். சமீபத்தில்தான் இப்படத்திற்கான பூஜை மிக எளிய முறையில் நடத்தப்பட்டது. மிஷ்கின் படங்கள் என்றாலே நிச்சயம் பின்னணி இசையும் பேசப்படும். கடைசியாக இவர் இயக்கிய ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் பின்னணி இசை கூட பெரியளவில் பேசப்பட்டது. காரணம், இளையராஜாவின் இசை அந்தளவுக்கு கதையோடு ஒன்றியிருந்தது. இந்நிலையில் மிஷ்கின் இயக்கும் "பிசாசு” படத்திற்கு இளையராஜாதான் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால்...
  பிரகாஷ்ராஜ் தற்போது இயக்கி, தயாரித்து, நடித்து வரும் படம் ‘உன் சமையலறையில்’. மலையாளத்தில் வெளிவந்த சால்ட் அன்ட் பெப்பர் என்கிற படத்தைதான் தமிழில் உன் சமையலறையில் என்ற தலைப்பில் ரீமேக் செய்துள்ளனர். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜுடன் முதன்முறையாக சினேகா இணைந்து நடித்துள்ளார். மற்றும் ஊர்வசி, தம்பிராமைய்யா, குமரவேல் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். படத்துக்கு இசையைமைத்திருக்கிறார் இசைஞானி. இளையராஜா. சமீபத்தில் இப்படம் தணிக்கைக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் அனைத்து...
  சென்னை, பெங்களூர் அணிகள் மோதும் ஐ.பி.எல்., லீக் போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது. இதில், கேப்டன் தோனி மீண்டும் அசத்தும்பட்சத்தில் சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற காத்திருக்கிறது. இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின் ஐ.பி.எல்., போட்டிகள் மீண்டும் துவங்குகின்றன. இன்று ராஞ்சியில் நடக்கும் 42வது லீக் போட்டியில் ஏற்கனவே ‘பிளே– ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்ற சென்னை அணி, பெங்களூருவை சந்திக்கிறது. சென்னை அணி, இம்முறை பங்கேற்ற 10 போட்டிகளில்...
 தெற்கு சீனா கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பது தொடர்பாக சீன தொழிலாளர்களுக்கும், வியட்நாம்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவம் காரணமாக வியட்நாமில் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட சீனர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்
துருக்கியின் வடக்கு பகுதியின் சோமா நகரில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், வெளியில் வர முடியாமல்  உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 301 தொழிலாளர்கள் தீயில் கருகி இறந்தனர். இவர்களின் பிணங்களை சுரங்கத்தினுள் இருந்து மீட்ட மீட்புப் படையினர், உடல் கருகிய நிலையில் கைகோர்த்தபடி உயிரை விட்ட இரட்டைப் பிறவிகளை கண்டு வாயடைத்துப் போயினர். சோமா நகரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர்...
ஜனாதிபதியிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்த மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தொலைபேசி மூலமாக உரையாற்றினார். தனது மதிப்பிற்குரிய உலகத் தலைவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர் என்று குறிப்பிட்ட ஒபாமா, 'அன்றன்றாடம் தங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை இழந்து உங்களை பிரிவது பேரிழப்பு. உங்களது தலைமையின்கீழ் இந்திய - அமெரிக்க நல்லுறவுக்கு நன்மை புரிந்தது என்று குறிப்பிட்ட ஒபாமா, தாங்கள் ஓய்வெடுத்துக் கொள்வீர்கள், விரைவில் உங்களை...