'நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட குறும்படங்களில் நடித்து வந்தவர் கருணாகரன். குறும்படங்களில் கலக்கி வந்தவர் பின்னர் பீட்சா, சூது கவ்வும், மாலை பொழுதின் மயக்கத்திலே போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த யாமிருக்க பயமே இவரை மேலும் பிரபலமாக்கியுள்ளது. இப்படத்தில் ஹீரோ கிருஷ்ணாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். கூடவே காமெடியிலும் கலக்கி இருந்தார். தற்போது யான், ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்து முடித்து இருப்பவர்,...
செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படம் எப்போதோ ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் பேரம் படியாமல் பல மாதங்களாக அவர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்குமிடையே பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டே இருந்தது. குறிப்பாக, கோச்சடையான் அனிமேஷன் படம் என்பதால், அதிக தொகை கொடுத்து வாங்கும் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்று சில தியேட்டர்காரர்கள் ஈராஸ் நிறுவனத்திடம் கேட்டு வந்தார்களாம்.
இதற்கிடையே வங்கி லோன்...
பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திரமோடி இன்று மாலையில் புனித நகரான வாரணாசி வந்தார். தனி ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மோடிக்கு என்.எஸ்.ஜி., பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்தனர்.
இந்த தொகுதியில் மோடி சுமார் இரண்டே முக்கால் லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2 தொகுதிகளில் போட்டியிட்ட மோடி வதோதராவில் நேற்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இன்று அவர் வாரணாசி வந்தார்.
இன்று இரவு 7 மணியளவில் மோடி கங்கையில் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியில்...
இத்தாலி நாட்டில் சர்வதேச ரோம் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நம்பர் 2 வீரர் ஜோகோவிக் (செர்பியா) 7–5, 4–6, 6–3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டேவிட் பெரரை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு கால்இறுதி நம்பர் ஒன் வீரர் நடால் (ஸ்பெயின்) 1–6, 6–3, 7–5 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேயை வீழ்த்தி...
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 41 ஆட்டங்கள் நடந்து முடிந்து உள்ளன. பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக நேற்றும், இன்றும் ஆட்டங்கள் நடத்தப்படவில்லை.
42–வது ஆட்டம் நாளை மாலை 4 மணிக்கு ராஞ்சியில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்– பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி 10 ஆட்டத்தில் 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு (பிளேஆப்) தகுதி பெற்றுவிட்டது.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி...
2008–ம் ஆண்டில் உதயமாகி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திருவிழா, இந்திய இளம் வீரர்களின் திறமையை வெளிக்கொணரும் தளமாக அமைய வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது.இதற்காக தான் ஐ.பி.எல். போட்டிக்கான ஒரு அணியில் அதிகபட்சமாக வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் மட்டுமே களம் இறங்க அனுமதிக்கப்படும் என்ற விதியும் வகுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளின் வரலாற்றை புரட்டி பார்த்தால் ரன்...
அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா வனப்பகுதியில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. இதனால் ஏற்பட்ட வெப்பத்தில் அங்குள்ள மரங்கள் தீப்பிடித்து எரிகிறது. இந்த காட்டுத்தீ நேற்று 2-வது நாளாக பயங்கரமாக எரிந்து கொண்டு இருக்கிறது.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள 9 வனப்பகுதியில் உள்ள மரங்களில் தீப்பிடித்து உள்ளது. உயர்ந்த மரங்களில் பிடித்த இந்த தீயினால் அந்த பகுதியையொட்டி உள்ள சான்மார்கோஸ் மற்றும் வடக்கு சான்டியோங்கோவில் உள்ள எஸ்கோன்டிடோ நகரங்களுக்குள் பரவும் அச்சுறுத்தல்...
ஒபாமாவின் சொத்து மதிப்பு ரூ.42 கோடி: அமெரிக்க அரசு வெளியிட்டது
அமெரிக்க அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடேன் ஆகியோரது சொத்து மதிப்பு பற்றிய விவரங்களை அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதன்படி ஒபாமாவுக்கு, 7.15 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு உள்ளது.
இது இந்திய பண மதிப்பின்படி 42 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு சமம் ஆகும். இதில் சுமார் 30 கோடி...
நைஜீரியாவில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர்.
கடந்த மாதம் பள்ளி மாணவிகள் 300 பேரை கடத்தி சென்று சிறை வைத்துள்ளனர். அவர்களை இன்னும் விடுவிக்கவில்லை. அனைத்துக்கும் மேலாக அவர்களை ‘செக்ஸ்’ அடிமைகளாக விற்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகிழக்கு நைஜீரியாவில் கலாபல்ஜ் மாவட்டத்தில் மெனாரி, சான்கயாரி, கராவா ஆகிய...
ரஷியா ‘ஏ.எம்.4 பி’ என்ற அதிநவீன தகவல் தொடர்பு செயற்கை கோளை ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் செலுத்தியது. கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் இருந்து அந்த ராக்கெட் புறப்பட்டது.
அது புறப்பட்ட 545 வினாடிகளில் நடுவானில் வெடித்து சிதறியது. இதனால் கரும்புகையுடன் தீப்பிழம்பாக எரிந்து மீண்டும் பூமியில் வந்து விழுந்தது.
இக்காட்சி டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பானது. இந்த செயற்கைகோள் ரூ.175 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. ராக்கெட்டின் புரோடான் கட்டுப்பாட்டு...