துருக்கியின் வடக்கு பகுதியில் உள்ள சோமா நகரில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் வர முடியாமல் தீயில் கருகி இறந்தனர்.இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிலர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏராளமான சடலங்கள் வெளியில் எடுக்கப்பட்டன. நேற்று இரவு மேலும்...
உலகெங்கும் அதிகரித்துவரும் தீவிரவாத அச்சுறுத்தல்களில் நைஜீரியாவைச் சேர்ந்த போகோஹராம் இயக்கத்தினரின் வன்முறை செயல்களும் தற்போது உலக நாடுகளின் கண்டனங்களைப் பெறத் துவங்கியுள்ளன. மேற்கத்திய கல்வித்தடை என்று பொருள்படும் தலைப்பைக் கொண்ட இந்த இயக்கம் நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மேற்கத்திய பாணி கல்வி நிலையங்களைத் தாக்கியும், ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தும் வருகின்றது. கடந்த மாதம் 14ஆம் தேதியன்று நைஜீரியாவின் சிபோக் கிராமத்தில் இருந்த உறைவிடப் பள்ளியில் இருந்து இந்த இயக்கத்தினர்...
லாவோசின் தலைநகர் வியன்டையனிலிருந்து இன்று காலை கிளம்பிய விமானப் படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இன்று காலை தலைநகரிலிருந்து கிளம்பிய இந்த விமானம் 470 கி.மீ தொலைவில் உள்ள சியாங்கூங் மாகாணத்தின் அருகில் விழுந்தது. இதில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரும், துணைப் பிரதமருமான டுவாங்க்சே பிச்சிட், அவரது மனைவி, நகர கவர்னர் உட்பட மூத்த அதிகாரிகள் பலர் பயணம் செய்ததாகவும், அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் பலியானதாகவும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம்...
உயர்கல்வி அமைச்சர் சந்திச் சண்டியரை போல் முழங்காலுக்கு மேல் சாரத்தை தூக்கி கொண்டு சத்தம் போடுவதாக அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அச்சுறுத்தினாலும் ருகுணு பல்கலைக்கழத்தில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை நடத்த இடமளிக்க போவதில்லை என ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான மருத்துவப்பீட மாணவர் நஜீத் இந்திக தெரிவித்தார். தேசத்திற்கு மகுடம் என்றபது அரசாங்கத்தின் தோற்றத்தை பெருக பண்ணும் திட்டம் மாத்திரமே. அதனை பல்கலைக்கழகத்திற்குள் நடத்த நாங்கள் இடமளிக்க...
ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒரு வரலாறு இருக்கும். நரேந்திர மோடியின் பின்னாலும் இதுபோன்ற ஒரு மிகப்பெரிய சரித்திரம் அடங்கி உள்ளது. குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகரில், 1950 செப்டம்பர் 17ல், உயர்தட்டு வகுப்பைச் சேர்ந்த வைசியா பிரிவின் உட்பிரிவான ‘மோத் கான்சி’ என்ற குஜராத்தில் மட்டுமே காணப்படும் மிகச்சிறிய பிரிவைச் சேர்ந்த தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடி - ஹீராபென் தம்பதியின் 6 குழந்தைகளில் 3வது குழந்தையாக பிறந்தவர் நரேந்திர...
 முள்ளிவாய்க்கால் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவஞ்சலி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.குடாநாடு மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆலயங்களில் வருடாந்த உற்சவங்களை நடத்துவதற்கு படையினர் தடைவிதித்துள்ளதாகத் தெரியவருகிறது. மேலும் பொது இடங்களில் கூடுவதற்கும், கூட்டங்களை நடத்துவதற்கும் உத்தியோகப்பற்றற்ற தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளைமறுதினம் மே 18 ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் பல இடங்களிலும் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான முயற்சிகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்...
கடந்தவாரம் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்னகி அம்மன் ஆலயத்தில் முதல்முதலில் கட்டப்பட்ட பழைய ஆலயத்திற்கு அருகாமையிலிருந்த கிணறு ஒன்றில் இருந்து நீர் பொங்கி நிலமட்டத்திலிருந்து 2அடி உயரமாக நீர்பொங்கி நீர் பம்பி இறைப்பதற்கு விடப்பட்டிருந்த துவாரத்தினுடாக வெளியே தண்ணீர் ஓடிக்கொண்டடிருக்கும் அதிசயம் தற்போது நடந்து கெண்டிருக்கிறது ஏராளமான மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர் இது தொடர்பாக கோவில் குருக்கள் கூறுவதாவது எதிர்வரும் மாதம் 9ம் திகதி வைகாசிமாதம் பெங்கல்...
யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில்  (16.05.14) அன்று  இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் உத்தரவிற்கமைய மே 18 நினைவு தினத்தினை பொது இடங்களில் அனுஷ்டிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் உயிரிழந்த தினமாகையினால் அவர்களை நினைவுகூருவார்கள் என்ற ரீதியிலே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரதுசகாக்களும்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தலைவர்களில் ஒருவராக கருதப்படும் பேரின்பநாயகம் எனப்படும் நெடிவணை கைது செய்யுமாறு கோரி ஜாதிக ஹெல உறுமய கட்சி நாளை, நோர்வே தூதரகத்திற்கு எதிரில் போராட்டமொன்றை நடாத்த உள்ளது. நெடியவணை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி சுதந்திர சதுக்கத்திலிருந்து, நோர்வே தூதரகம் வரையில் ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுப்பினர்கள் நாளை பேரணியாக செல்லவுள்ளனர். நெடியவணை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரி நோர்வே தூதரகத்திடம் மகஜர் ஒன்றையும்...
      வடக்கு மாகாணசபையில் இன்று நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முகமாக மாகாணசபை உறுப்பினர்களால் இன்று காலை 11 மணியளவில் வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வை தடுக்கும் முகமாக மாகாணசபை அமைந்துள்ள பிரதேசம் எங்கும் பெருமளவான பொலிஸாரும் ,புலனாய்வுதுறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர் அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களை சபைக் கட்டடத்துக்குள் உள்நுழைய...