தமிழ் சினிமாவில் டீச்சர் வேடங்களுக்கு எப்போதுமே ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில், கடலோரக்கவிதைகள் படத்தில் நடித்த ரேகா அந்த வேடத்தில் நடித்த பிறகு கோலிவுட்டில் அவருக்கான மரியாதையே அதிகரித்தது. அதேபோல் சமீபத்தில் ஹரிதாஸ் என்ற படத்தில் ஒரு பொறுப்பான டீச்சர் வேடத்தில் நடித்திருந்தார் சினேகா.தனது கேரியரில் மிக முக்கியமான வேடம் என்பதால், அந்த படத்தில் நடித்து முடித்த பிறகுதான் திருமணம் என்று சொல்லி தேதியை தள்ளி...
இந்தியாவிற்கு தற்போது தேவைப்படுவது ஆக்கபூர்வமான தலைமை எனவும், தலைமை பொறுப்பை ஏற்பவர் நாட்டின் வளர்ச்சி குறித்து அடுத்த 20 ஆண்டுகளுக்கும் சிந்திக்கும் தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்பவருக்கு அவர் கூறிய அறிவுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், நாட்டின் உயரிய பதவியில் இருந்தாலும்...
பதினோறாவது உலக கோப்பை கால்பந்து தொடர், 1978ல் அர்ஜென்டினாவில் நடந்தது. இங்கு ராணுவ ஆட்சி புரிந்த ஜெனரல் விடேலாவின் சர்வாதிகார போக்கு மற்றும் மனித உரிமை மீறலை கண்டித்து பல நாடுகள் போட்டியை புறக்கணிக்க முடிவு செய்தன. பின் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) தலையிட்டு சமரசம் செய்தது. தகுதிச் சுற்றுப் போட்டிகளின் முடிவில், முன்னணி அணிகளான இங்கிலாந்து, சோவியத் யூனியன், செக்கோஸ்லோவேகியா, யுகோஸ்லோவியா, பிரான்ஸ் அணிகள் வெளியேறின. முதல் சுற்றுப்...
சமையல்களுக்கு சுவை தருவதோடு மட்டுமல்லாமல் மனிதனுக்கும் எண்ணற்ற மருத்துவ நலன்களை அள்ளித்தருகிறது கிராம்பு.கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. * கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல்...
பிரபல கைப்பேசி உற்பத்தி நிறுவனமான BlackBerry ஆனது Foxconn நிறுவனத்துடன் 5 வருட கால ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.இதன்படி இரு நிறுவனங்களும் இணைந்து அறிமுகம் செய்த முதலாவது கைப்பேசியாக BlackBerry Z3 கைப்பேசியின் Jakarta பதிப்பு விளங்குகின்றது. நாளைய தினம் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியின் விலையானது 200 டொலர்கள் மட்டுமே ஆகும். BlackBerry 10.2.1 இயங்குதளத்தில் செயற்படவுள்ள இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு, 650 x 960 Pixel Resolution உடைய QHD...
சூரிய மண்டலத்தில் ஒரு சதுரவடிவான ஓட்டை இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், இந்த சதுரவடிவமான ஓட்டையை கமெராவில் புகைப்படம் எடுக்கும்போது மின்மினி பூச்சி போல மின்னுகின்றது. மேலும் கமெரா மூலம் அந்த பகுதியை கடந்து செல்கையில், தீப்பற்றி எரிவதுபோல் தீப்பொறிகள் தோன்றுகிறது. இந்த காணொளி மே மாதம் 5ம் திகதி முதல் 7ம் திகதி வரை, இரண்டு நாட்களாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய ஒட்டையினால், பூமிக்கு எந்தவித...
வாத்துவ, பொத்துபிட்டிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி, பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பொலிஸார் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் முச்சக்கர வண்டியில் இருந்த இருவர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பாதுகாப்பு முன்னாயத்தங்கள் தொடர்பில் இந்திய கரையோர காவல்துறையினர் நேற்று தமிழகத்தின் கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் தெளிவு நடவடிக்கை ஒன்றை நடத்தினர். இதன்போது எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நினைவாக எவ்வித நிகழ்வுகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. அவ்வாறான நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுமானால் அது எதிர்காலத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்று கரையோர காவல்துறையினர் குறிப்பிட்டனர் என்று தெ ஹிந்து தெரிவித்துள்ளது. இதேவேளை, புதிதாக எவரினதும் நடமாட்டங்கள் இருக்குமானால்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் ரத்து செய்யுறுமா பிரிட்டன் அரசாங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கோபி என்ற புலி உறுப்பினருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் கைது செய்யபபட்டமைக்கும் பிரிட்டன் அதிருப்தி வெளியிட்டுள்து. பொதுநலவாய நாடுகள் மற்றும் வெளிவிவார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்கள் தடை செய்யப்பட்டமைக்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் இலங்கையில் சட்டத்தை...
இன்று காலை (15.04.2014) வவுனியா வைரவப்புளியங்குளம் ஜங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள குகராஜாவின் நினைவுச்சிலைக்கு ரெலோ அமைப்பின் தலைவரும், தற்போதைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். ரெலோ அமைப்பின் ஏனைய அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், எதிர்வரும் 18ம் திகதி தீர்மானித்ததன் படி தமிழர்வாழ்கின்ற பிரதேசங்கள் எங்கிலும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக அஞ்சலி செலுத்தப்படும் அதனை...