இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது:- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்ந்து வரும் முகாம்களில் இவ்வாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை சட்டவிரோதமான முறையில் நாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் முயற்சிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விடயங்கள் குறித்து இலங்கை அகதிகள்...
 சென்னையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 16ம்திகதி 5 இடங்களில் குண்டு வெடிக்கும் என நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24ம் திகதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் 16ம் திகதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் வாக்கு என்னும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 3 தொகுதிகளுக்கு பதிவான வாக்கு...
இன்றைய திகதியில் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாக விளங்கிக் கொண்டிருப்பது ஒரு சில நிறுவனங்கள்தான். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், யுடிவி மோஷன் பிக்சர்ஸ், ஸ்டுடியோக்ரீன், திருப்பதி பிரதர்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் பன்னாட்டு நிறுவனம்.             தமிழ்த்திரைப்படம் தயாரிக்க வந்த பல கார்ப்பரேட் கம்பெனிகள் வந்த வேகத்தில் திரும்பிச்சென்றுவிட்டன. தாக்குப்பிடித்து நிற்பது யுடிவி மட்டுமே. இங்குள்ள சூழலைப் புரிந்து கொண்டு...
"இந்தியாவில் புதிதாக அமையும் அரசுடன், அமெரிக்கா இணக்கமாக செயல்படும்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சீனாவும், மோடியை பாராட்டியுள்ளது. சீனாவின், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஆங்கில நாளிதழான, "குளோபல் டைம்' பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளதாவது: தற்போதைய சிக்கலான அரசியல் சூழ்நிலையில், சீனாவுடனான இணக்கமான பொருளாதார கொள்கையை ஏற்படுத்த கூடிய தலைவர்களில், மோடி முக்கியமானவர். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்ற பின், குஜராத்தில் சீன நிறுவனங்கள்...
 ‘‘மீண்டும் ‘பார்முக்கு’ திரும்பிய யுவராஜ் சிங், உலகத்தரம் வாய்ந்த இந்திய வீரர்,’’ என, பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லி பாராட்டு தெரிவித்தார். இந்திய அணியின் ‘ஒல்–ரவுண்டர்’ யுவராஜ் சிங். இவர், சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில், 21 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். இதனால் இந்திய அணியின் தோல்விக்கு யுவராஜ் சிங் தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்தன. பின்,...
கட்டாக்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் உத்தப்பா 80 ரன்கள் விளாச, கோல்கத்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி மீண்டும் ஏமாற்றம் அளித்தது. ஒடிசாவின் கட்டாக்கில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை, கோல்கத்த  அணிகள் மோதின. கோல்கட்டா அணியில் காலிசுக்கு பதில் சாகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா  கேப்டன் காம்பிர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். துவக்கம் மோசம்: மும்பை அணிக்கு கவுதம்(8),...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீக்கு பயந்து சுமார் 20 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அமெரிக்காவில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் திடீர், திடீரென காட்டு மரங்கள் தீப்பிடித்து எரிந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, கலிபோர்னியா மாகாணத்தில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தெற்கு கலிபோர்னியா பகுதியின் காடுகளில் உள்ள மரங்கள் அனைத்தும் தீப்பிடித்து எரியத்...
பிரேசிலில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் ஸ்பெயின் அணியை அணியின் மேலாளர் விசென்டி டெல் போஸ்க்யூ செவ்வாய்க்கிழமை அறிவித்தார். 30 பேர் கொண்ட இந்த உத்தேச அணியில் டேவிட் டீ ஜீ, டேனி கர்வஜல் மற்றும் ஆண்டர் இடரஸ்ப் உள்ளிட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் அணி மே 25-ம் தேதி இறுதி செய்யப்படும். அதில் 23 பேர் இடம்பெற்றிருப்பர். உத்தேச அணியில் முன்கள...
ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த முன்கள வீரர் மெஸ்ஸி தற்போது லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணிக்காக ஆடி வருகிறார். 2005-இல் பார்சிலோனா அணியில் இணைந்த நட்சத்திர வீரரான மெஸ்ஸி நான்கு முறை சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றுள்ளார். சமீபத்தில் போர்ச்சுகலைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் அணியின் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை அந்த அணி ரூ. 150 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. அப்போதிருந்தே ரொனால்டோவுக்கு இணையாக மெஸ்ஸிக்கும் சம்பளம் வழங்கப்படும்...
பிரேசில் செல்லும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. 23 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் ஆறு வீரர்கள் மட்டுமே முந்தைய உலகக் கோப்பையில் ஆடிய அனுபவம் வாய்ந்தவர்கள். இதில் 11 பேர் இங்கிலாந்து அணிக்காக பத்துக்கும் குறைவான ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டியில் துடிப்புடன் செயல்பட்ட இளம் வீரர்களை அணியின் மேலாளர் ராய் ஹட்ஜ்சன் தேர்ந்தெடுத்துள்ளார். ஃபிராங்க் லாம்ப்ர்ட் மட்டுமே வயதான வீரர். அடுத்த மாதம் அவருக்கு...