துருக்கியில் உள்ள சோமா நகரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இஸ்தான் புல்லில் இருந்து 250 கி. மீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த சுரங்கத்தில் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தனர்.
நேற்று ஒரு பிரிவினர் பணி முடிந்து 'ஷிப்ட்' மாறும் போது சுரங்கத்தின் மின்சாரம் சப்ளை செய்யும் பிரிவில் திடீரென தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்தனர். 420 மீட்டர் ஆழ சுரங்கத்தில் சிக்கி தவித்த தொழிலாளர்களை...
பாகிஸ்தானில் இந்துக்கள் ‘மைனாரிட்டி’ ஆக உள்ளனர். அவர்கள் சிந்து மாகாணத்தில் பெருமளவில் வசிக்கின்றனர். அங்கு அவர்கள் மீது சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கடத்தல், வழிப்பறி, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை நடத்தி மிரட்டி வருகின்றனர். அங்குள்ள இந்து கோவில்கள் தீயிட்டு எரிக்கப்படுகின்றன. சாமி சிலைகள் உடைக்கப்படுகின்றன.
எனவே, தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து ஆண்டு தோறும் பாகிஸ்தானில் இருந்து 5 ஆயிரம் இந்துக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த தகவலை...
உக்ரனைனின் கிழக்குப்பகுதியும் சுதந்திரம் பெற்றுவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
Thinappuyal -
உக்ரனைனின் கிழக்குப்பகுதியும் சுதந்திரம் பெற்றுவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
உக்ரைனின் கிரிமியா பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கடந்த மார்ச் 17ம் திகதி ரஷ்யாவுடன் இணைந்தது.
இதேபோன்று உக்ரைனின் கிழக்கு பகுதியிலும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அரசு அலுவலகங்களை கைப்பற்றி, தனி நாடு கோரிக்கைக்கான போராட்டத்தை நடத்த தொடங்கினர்.
இதன் அடிப்படையில் கடந்த 11ம் திகதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இப்பகுதி சுதந்திரம் பெற்றதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.
மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மீது அவர்கள் சொந்த...
மாணவிகளை விடுவிக்க முதலில் எங்கள் தோழர்களை விடுவிக்க வேண்டும்: நைஜீரியா பயங்கவாத இயக்கம் திட்டவட்டம்
Thinappuyal -
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்க வேண்டும் என்றால் கைதான தீவிராவாதிகளை விடுவிக்க வேண்டும் என போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு வலியுறுத்தியுள்ளது.நைஜீரியாவில் தனி நாடு கேட்டு போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தொடர்ந்து பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த மாதம் 14ம் திகதி சிபாக் நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றினுள் புகுந்த தீவிரவாதிகள், அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த 276 மாணவிகளை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்றனர்.
இந்த மாணவிகளை விடுவிக்க...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இந்த மாத இறுதியில் இலங்கை தொடர்பிலான விசாரணை நடாத்தும் ஆணைக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதற்கு அமைவாக இந்த மாத இறுதியில் விசாரணை நடாத்தும் ஆணைக்குழுவிற்கான பிரதிநிதிகளை, நவனீதம்பிள்ளை பெயரிடவுள்ளார்.
எதிர்வரும் மாத முதல் வாரமளவில் விசாரணைப் பணிகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆணைக்குழு தொடர்பிலான சகல தகவல்களையும்,...
கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 52 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இவர்களில் அதிகளவானோர் ஆண்கள் எனவும் அவர்களில் 15 மற்றும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் முழுவதும் நாட்டில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுத்த போதும், இந்த வருடத்தின்...
ஜெனரல் க்யூ குயிலங் தலைமையிலான சீன படையதிகாரிகள் குழுவொன்று நேற்று இலங்கை வந்தடைந்துள்ளது.
Thinappuyal -
ஜெனரல் க்யூ குயிலங் தலைமையிலான சீன படையதிகாரிகள் குழுவொன்று நேற்று இலங்கை வந்தடைந்துள்ளது.
சீன படைக்குழுவினரை, இலங்கையின் முப்படைத் தளபதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஜெனரல் க்யூ குயிலங் சீன கம்யூனிஸ் கட்சியின் அரசியல் குழுவின் உறுப்பினர் என்பதுடன் அதன் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமாவார்.
1950 ஆண்டு மார்ச் மாதம் சாங்டோங் மாநிலத்தில் பிறந்த அவர் ஹன் என்ற இனத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன மக்கள் இராணுவத்தில் 1966 ஆம்...
அரசின் ஊது குழலாக இருந்துகொண்டு தெரிவுக்குழுவில் பங்கேற்க எமக்கு அழைப்பு விடக்கூடாது
Thinappuyal News -
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் தமிழ்பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளவேண்டும். என விடுக்கப்படும் அழைப்பு மிக போலியானவை. என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தமிழ்பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்குபற்றவேண்டும். என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்திருந்த அழைப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருக்கின்றார்.விடயம் தொடர்பாக மேலும் அவர்...
கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவரென இலங்கை அரசு நிறுவ முற்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை புலிகளுடன் தொடர்பு இருக்கிறதா எனக் கேட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மே-18 ஆம் திகதி நினைவுகூரப்படவுள்ள நிலையில் அதனைத் தடுத்து நிறுத்த முன்னெடுக்கப்பட்ட ஓர் அச்சுறுத்தலே தன்னிடம் இடம்பெற்ற விசாரணை என ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.நேற்றைய...
இழப்புக்களிலிருந்து மீண்டெழுந்து உரிமைகளையும் பெற்று அபிவிருத்தி காணவேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு என்றார்பிரதியமைச்சர் முரளிதரன்
Thinappuyal -
யுத்தக் கள வெற்றிக்குப் பின்னாலிருக்கும் வேதனைகளும் வலிகளும் பட்டாசு கொளுத்தி யுத்த வெற்றியைக் கொண்டாடும் தூரத்திலிருக்கும் பார்வையாளர்களுக்குத் தெரியாது.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று மாலை பனம்பொருள் கைப்பணி மாதிரிக் கிராமம் மட்டக்களப்பு மைலம்பாவெளியில் திறந்து வைக்கப்பட்டது.
அந்நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அரசின் ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு குடிமகனின் வாழ்வாதாரத்தை...