மஹிந்த அரசின் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே இந்த அழைப்பை விடுத்துள்ளார். தமிழ் உறவுகளைக்கொத்துக் கொத்தாகக் கொன்றுவிட்டு அரசு நடத்தும் இந்த யுத்த வெற்றிவிழாக் கொண்டாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கமாட்டார்கள் என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார். கூட்டமைப்பினருக்கு கோத்தபாய ராஜபக்ஷவினால் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள...
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தி- ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மனித நேயத்தை மேம்படுத்துவதற்கு அனைவரும் அணி திரள வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுவான நலனுக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமேன அவர் தெரிவித்துள்ளார். கௌதம புத்த...
முள்ளிவாய்க்காலில உயிரிழந்த மக்களிற்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசு அனுமதி மறுத்து வருகின்ற நிலையினில் குறித்த யுத்த வெற்றியினை நினைவு கூரும் வகையினில் அந்த யுத்தத்தில் பலியான இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வன்னியினில் நடத்தப்பட்டுள்ளது. இவ்வைபவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியினில் இலங்கை இராணுவத்தினால் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவு தூபிக்கு முன்பாக இன்று நடைபெற்றுள்ளது. வடமாகாண ஆளுநரும் போர்க்குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையிலேயே இந்த வைபவம் நடைபெற்றிருந்தது....
'களனி - பேலியகொட பிரதேசங்கள்; சர்ச்சைக்குரிய அமைச்சரும், இராஜபக்சக்களின் ஆசீர்வாதத்தை பெற்றவருமான மேர்வின் டீ சில்வாவின் நிழல் அரசு கோலோச்சும் பகுதிகள்' இலங்கையின் தலைநகர் கொழும்பை அண்மித்த பேலியகொடை நகர சபையின் உறுப்பினர் ஒருவர், இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார். சாமின் சந்தருவன் என்ற நகர சபை உறுப்பினரான இவர்  தளுகம பழைய கண்டி வீதியில் தனது வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இவர்...
கடந்த கால யுத்த வடுக்கள் உண்மையில் மறக்கக்கூடியவை அல்ல என்பதுடன், அதை தங்களால் நினைத்துப் பார்க்காமலிருக்கவும் முடியாதென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ஏனெனில், தனது சொந்த ஒரேயொரு அண்ணனை யுத்தக் களத்தில் இழந்ததாகவும் அவர் கூறினார். மேலும், தனது இணைப்புச் செயலாளரராகவுள்ள பொன். ரவீந்திரனும் அவரது ஒரேயொரு அண்ணனை இழந்துள்ளார். அவ்வாறே, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல தாய்மார்கள் தங்களது குழந்தைகளை இழந்துள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான போராளிகளை இழந்துள்ளோம்...
 அட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அரசாங்கத்தை விட்டு விலகுவன் எண்டு வெருட்டி இருக்கிறார். இது உலக அதிசயம் எண்டு சில பேர் சொல்லுயினம். ஏணெடால் மனுசன் அரசாங்கத்தோட எப்பிடி ஒட்டிக் கொண்டு இருக்கிறார் எண்டு இந்த அகிலமும் அறியும். பிறகு எப்பிடி? இப்ப கொஞ்ச நாளாய் மகிந்த வளக்கிற நாய்க்குட்டியள் அவரைப் பாத்தே குலைச்சுக் கொண்டு நிக்குதுகள். விமல் வீரவன்சவும் சம்பிக்கவும் அரசாங்கத்த விட்டு எப்ப விலகுறது எண்டு கணக்கு...
  இந்தியாவில் புதிதாக தெரிவாகவுள்ள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பொதுத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் 16ம் திகதிக்கு பின்னர் புதிய அரசாங்கம் பதவி ஏற்கவுள்ளது. இந்த நிலையில் புதிய அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தி, விரைவான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்...
தமிழ்த்தேசியத்தையும், பிரபாகரனையும், முள்ளிவாய்க்காலையும் முன்வைத்து வடபுலத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு பொது இடத்தில் அஞ்சலிக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தாதது ஏன்? வாக்குக்கேட்க மட்டும் தமிழ் மக்களும், தமிழ்த்தேசியமும், வீரவசனங்களும். கோவணம் கட்டினாலும் தமிழன் கொள்கை மாறக்கூடாது, எம் தமிழினத்தைக் கொன்றொழித்த சிங்கள இனவெறியர்களுக்கு நாம் பாடம் கற்பிக்கவேண்டும், இது எமது உரிமைப்போராட்டம் என்றெல்லாம் கூறிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, அதிலுள்ள தமிழரசுக்கட்சி சார்ந்தவர்கள் இறந்த போராளிகளுக்கும், பொதுமக்களுக்குமான ஒரு அஞ்சலிக்கூட்டத்தை ஒழுங்கு...
    யுத்தம் முடிந்து யாழ். மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ள 5ஆவது வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள் பெருமெடுப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி யாழ்ப்பாணம் பொது நூலகத்தினை அண்மித்த பகுதியினை வெசாக் வலையமாக அறிவிக்கப்பட்டு பெருமெடுப்பில் வெசாக்கூடுகள் , புத்தரின் வரலாற்றுக் கதைகளைக் கூறும் காட்சிக் கூடங்கள் என மிகவும் பிரமாண்டமான அளவில் குறித்த பகுதி அலங்கரிக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 14ஆம் திகதி இரவு 7 மணிக்கு குறித்த வெசாக் வலையம் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி...
இலங்கையில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.   இது மிகவும் மோசமான ஒரு மனித உரிமை மீறல் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, காண்டுமிராண்டித்தனமானது என அவர் கூறுகிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள்...