வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இந்தியாவுக்கு வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான இணைச் செயலாளரினால் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலை வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலக அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இணைச் செயலாளரும், இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விடயங்களைக் கையாளும் மூத்த அதிகாரியுமான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன்...
1990 முதல் 2014ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடந்த பொருளாதார குற்றம் மற்றும் புலனாய்வு பற்றிய கதையாக உருவாகிறது உறுமீன். சிம்ஹா, காளி, ஆராதனா உள்பட பலர் நடிக்கின்றனர். இதுபற்றி இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி கூறும்போது, தமிழ் நாட்டில் நடந்த பொருளாதார குற்ற புலனாய்வுகளை திரைக்கதையாக அமைத்து உண்மை சம்பவம் பின்னணியை மையமாக வைத்து ஆக்ஷன் திரில்லர் படமாக இது உருவாகிறது. எல்.சிவபாலன் தயாரிக்கிறார். சென்னை, புதுச்சேரி, கோவை,...
போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். இப்படத்தையடுத்து விஷாலுடன் மதகஜ ராஜா படத்தில் நடித்தார். அப்படம் இன்னும் திரைக்கு வராமல் பென்டிங்கில் உள்ளது. இதற்கிடையில் சுதீப் ஜோடியாக மாணிக்யா என்ற கன்னட படத்தில் நடித்தார். தற்போது பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் நடிக்கிறார். நடனத்தில் ஸ்பெஷலிஸ்ட் என்ற வகையில் முதலில் இந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சென்றது. பின்னர் அது வரலட்சுமிக்கு மாறியது. இவரும்...
ஏமன் நாடு அதிபர் வீட்டு அருகே நேற்று இரவு குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஏமன் நாட்டின் துறைமுக நகரில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் அருகில் இருந்த கட்டடத்தின் சுவார் இடிந்துள்ளது. காயமுற்றவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அர்ஜென்டினாவை சேர்ந்த விஞ்ஞானி ஆன்ட்ரஸ் கேரஸ்கோ காலமானார். அவருக்கு வயது 67. உலகில் மிக பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்டுபிடித்தவர்.
இவர் அந்நாட்டு தேசிய அறிவியல் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தார். கடந்த சிலநாட்களாக அவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து உலகக் கோப்பையை ஜெர்மனி அணி வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் கோலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூரில் அவர் சனிக்கிழமை மேலும் கூறியதாவது:
ஜெர்மனி அணியில் திறமைமிக்க வீரர்கள் பலர் உள்ளனர். மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனி மிகவும் ஆபத்தானது. எனது ஆதரவு ஜெர்மனிக்குதான். இந்த ஆண்டு ஜெர்மனிக்கு ராசியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஜெர்மனியின் ஃபிலிப் லாம், எனக்குப் பிடித்த வீரர். அணியில் உள்ள மற்ற வீரர்கள் கோல்...
கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற இந்த சீசனுக்கான டைமண்ட் லீக் தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி-அன் ஃப்ரேஸர்-ப்ரைஸ் (படம்) வெற்றி பெற்றார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் 11.13 விநாடிகளில் இலக்கை எட்டி ப்ரைஸ் முதலிடம் பிடித்தார். நைஜீரிய வீராங்கனை ஓக்பேர் 11.18 விநாடிகளில் வந்து 2-ம் இடத்தைப் பிடித்தார்.
800 மீட்டர் பந்தயப் போட்டியின் மகளிர் பிரிவில் உலக சாம்பியனான கென்யாவின் யுனிஸ்...
வான்கடே மைதானம் மும்பை அணியின் கோட்டை என்று கடந்த ஓர் ஆண்டாக நீடித்து வந்த வரலாற்றை தோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் சனிக்கிழமை இரவு மாற்றி அமைத்தனர்.
மும்பை நிர்ணயித்த 158 என்ற வெற்றி இலக்கை 19.3 ஓவர்களில் எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அசத்தலாக வெற்றி பெற்றது. இத்துடன், வான்கடே மைதானத்தில் மும்பை தொடர்ச்சியாக பெற்ற 10 வெற்றிகள் என்ற எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது.
மும்பையில்...
சிம்புவை காதலித்து பின்னர் அவரை பிரிந்தபோது பிரபுதேவாவுடன் தோள் போட்டுக்கொண்டு எப்படி சிம்புவை சிலகாலம் நயன்தாரா வெறுப்பேற்றினாரோ அதற்கும் மேலாக இப்போது ஹன்சிகா அவரை வெறுப்பேற்றி வருகிறார்.
குறிப்பாக, சிம்புவுக்கு எந்தெந்த நடிகர்களெல்லாம் பிடிக்காதோ அவர்களுடனெல்லாம் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார். அந்த வகையில், சேட்டையில் இணைந்த ஆர்யாவுடன் சமீபகாலமாக செம லூட்டி அடிக்கிறார் ஹன்சிகா. அதிலும் தற்போது மீண்டும் அவருடன் மீகாமன் படத்தில் இணைந்திருப்பவர், தற்போது தனக்கு கட்டுக்காவல்...
கோச்சாடையான் படத்தையடுத்து ரஜினி நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. அதில் முறுக்கு மீசை வைத்து கிராமத்து கெட்டப்பில் நடித்த ரஜினியுடன் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்த காட்சிகள்தான் மே 2-ந்தேதியில் இருந்து நடந்து வந்தது. அதில் அவர்களது ரொமான்டிக்கான காட்சிகள் மட்டுமே தற்போது படமாக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து லிங்கா படத்துக்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், இனி அந்த...