புத்தகம் என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் சத்யா. இவர் வேறு யாரும் இல்லை ஆர்யாவின் தம்பி.
சத்யாவிற்கு முதல் படம் வெற்றி தர வில்லை என்றாலும் துவண்டு போகாமல், சுதாரித்துக் கொண்டு இப்போது அமர காவியம், எட்டுத்திக்கும் மதயானை, காதல் டூ கல்யாணம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
அமர காவியம் படத்தை ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா இயக்குகிறார். அமர காவியம் படத்தை ஆர்யா தன்னுடைய...
துமுக இயக்குனர் ஹலிதா ஷமீன் இயக்கி இருக்கும் படம் பூவரசம் பி பி,மே 30ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்
Thinappuyal -
புதுமுக இயக்குனர் ஹலிதா ஷமீன் இயக்கி இருக்கும் படம் பூவரசம் பி பி. விண்ணைத்தாண்டி வருவாயா, நண்பன் போன்ற படங்களை ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்தை பற்றி இயக்குனர் ஹலிதா கூறுகையில், கோடை விடுமுறையை கொண்டாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள், திடீரென்று ஒரு வன்முறை சம்பவத்தை நேரில் காண்கின்றனர்.
அந்த வன்முறை சம்பவத்தை நேரில் பார்த்ததால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி கையாள்கிறார்கள் என்பது தான் கதை...
இரண்டு வருடங்களுக்கு முன் எங்கள் காதல் முடிந்தது, நாங்கள் பிரிந்து விட்டோம் என்று கூறியவர்கள் சிம்பு மற்றும் நயன்தாரா.
இவர்களின் பிரிவுக்கு பிறகு சிம்பு ஹன்சிகாவை காதலிக்க, பின் அந்த காதலும் முறிந்து விட்டது.
நயன்தாராவோ பிரபு தேவாவுடன் காதல் வயப்பட்டு பின் அவர்களும் பிரிந்தனர்.
சமீபத்தில் தான் முன்னாள் காதலர்கள் சிம்பு மற்றும் நயன்தாரா இது நம்ம ஆளு படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்...
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிதி திரட்டும் நோக்கில், தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் வோட்டர் கேட் ஹோட்டலில் செனட்டர் ஜோன் மெக்கேன் மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகளை ரணில் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரை நடாத்தவே அமெரிக்கா செல்வதாக ரணில் அறிவித்திருந்தார்.
ஆய்வு நோக்கமொன்றிற்காக செல்வதாக அவரது மனைவி...
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுசித்திரா துரைக்கும் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவிற்கும் இடையிலான கலந்துரையாடல்
Thinappuyal -
புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட தடையினை இந்தியா ஆதரிக்கின்றதாகக் கூறப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானதென இந்தியாவின் இலங்கை, மாலைதீவிற்கான இணைச் செயலாளர் சுசித்ரா துரை தெரிவித்ததாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுசித்திரா துரைக்கும் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தில் வெள்ளிக்கிழமை...
800 இராணுவ வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது
Thinappuyal -
800 இராணுவ வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கான அறிவித்தலை யாழ்.மாவட்ட இராணுவத்தின் ஊடக இணைப்பாளர் மல்லவாராச்சி இன்று வெளியிட்டார்
யாழ். சிவில் அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற படைத்தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த அறிவித்தலை உத்தியோக பூர்வமாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வயதின் அடிப்படையில் ஓய்வுபெற்றவர்கள், சேவை அடிப்படையில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும்...
வேலூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நளினி முருகன் இருவருக்குமிடையே இன்று சந்திப்பு இடம்பெற்றது.
வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நளினி – முருகன் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி நளினி – முருகன் இன்று சந்தித்து பேசினர்.
காலை 7.30 மணிக்கு ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு இருவரும் 8 மணிவரை ½ மணிநேரம் சந்தித்து பேசினர்.
டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் தலைமையிலான பொலிஸார் பாதுகாப்பில்...
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் காட்டு யானைகள் நடத்திய தாக்குதலில் 6 கிராமங்களில் உள்ள 25 வீடுகள் சேதமடைந்துள்ளன.
காட்டு யானை தாக்குதலில் வீடுகள் சேதமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளன.
அதேவேளை காட்டு யானைகளில் தாக்குதல் காரணமாக பல விவசாய நிலங்களும் அழிவடைந்துள்ளன.
தமது கிராமங்களில் காட்டு யானைகளில் தாக்குதல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே வவுணதீவு குளத்திற்கு அருகில் உயிரிழந்த யானை ஒன்றின்...
நீண்டகாலமாக பௌத்தர்களின் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த தம்புள்ள பள்ளிவாசல் ஜனாதிபதி மஹிந்த மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் மறைமுக ஆசியுடன் இடித்து நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது.
இதுவரை காலமும் பள்ளிவாசலை அவ்விடத்தில் இருந்து அகற்ற விடமாட்டோம் என்று வீரம் பேசிய முஸ்லிம் அமைச்சர்களும், ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்ய மாட்டார் என்று சரணாகதி அடைந்த ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும் மூக்குடைபட்டு நிற்கின்றனர்.
இந்நிலையில் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்பதைப் போல உடைக்கப்படும் பள்ளிவாசலை அரசாங்கம் கைகாட்டும் மாற்று...
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெசாக் பௌர்ணமி நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்த விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் தொடர்பிலும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி...