முள்ளிவாய்க்கால் படுகொலையை இந்த அரசு திட்டமிட்டு செய்துள்ளது -செல்வம் அடைக்கலநாதன் :
Thinappuyal News -0
மே-18 ஆம் திகதியை எல்லோரும் எதிர்பார்த்துள்ள நிலையில் முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறுகின்ற இந்த வேளையிலே அந்த நினைவு கூறும் நிகழ்வுகளை தடுக்கின்ற செயற்பாட்டில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றமையினை நினைக்கின்ற போது கவலையையும்,வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
முள்ளிவாய்க்காலிலே நடாத்தப்பட்ட அனர்த்தங்கள்களின் போது...
'
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் மாணவர் பிரதிநிதிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளமைக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியுள்ளனர்.
இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
இந்த அச்சுறுத்தல்கள் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக யாழ்....
இந்தியா – மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் இலங்கை விஜயம்
Thinappuyal News -
இந்தியா - மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா துரைசுவாமிநாதன் இலங்கை விஜயம்
யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை - இந்தியா - மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன்,
இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட குரும்பசிட்டிப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 7 வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தார்.இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், ஒவ்வொரு வீடும் தலா 5...
அரசாங்கம் பற்றி வெளியே விமர்சனம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் சட்ட மூலங்கள் மற்றும் வேறு நிர்வாக விடயங்கள் தொடர்பில் கருத்து முரண்பாடு இருந்தால் நேரடியாக சொல்ல வேண்டும்.
பின்னால் சென்று வேறு வேறு இடங்களில் சொல்வதில் பயனில்லை. அமைச்சரவை அல்லது நாடாளுமன்றக்குழுக் கூட்டங்களில் இது...
கலிங்கபட்டி: "விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்து ராஜபக்சே கூட்டத்தை வீழ்த்தி தமிழீழத்தை மீட்பார் என்றும், அந்த காலம் வெகுவிரைவில் வரும் என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா கலிங்கபட்டியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர்வைகோ கடந்த 4 நாட்களாக தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
நேற்று நடைபெற்ற வீரத்தாய் வேலுநாச்சியார் நாடகத்தை தொடங்கி வைத்து வைகோ பேசுகையில், நான் எந்த கூட்டணியில் இருந்தாலும் நானும் ம.தி.மு.க.வும்...
ஆபிரிக்க ஒன்றியம் இலங்கையை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க இலங்கை உறவுகளில் புதிய சகாப்தமாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது.கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கையை ஆபிரிக்க ஒன்றியம் அங்கீகாரம் செய்துள்ளது,இதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே ஆசிய பிராந்திய வலயத்தில் ஆபிரிக்க ஒன்றியத்தினால் அங்கீகாரம் பெற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையுடன் கூடுதலான சமூகப் பொருளாதார உறவுகளைப் பேண சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆபிரிக்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.அண்மையில் இலங்கை...
வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இதுவரையில் தீர்வு வழங்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். வடக்கு மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வனவிலங்குகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு குறித்த பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற போது உயிரிழந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.யுத்தம் காரணமாக பெரும்...
சில பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகளினால் ஒட்டு மொத்த பிக்கு சமூகத்திற்கே இழிவு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் பௌத்த பிக்குகளை தண்டிப்பதற்கு பௌத்த மாநாயக்க தேரர்களுக்கோ அல்லது சங்கசபைகளுக்கோ அதிகாரமில்லை என பிரதி பௌத்த சாசன அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார். எனவே தவறிழைக்கும் பௌத்த பிக்குகளை தண்டிக்கும் நோக்கில் புதிய சட்டமொன்று உருவாக்கப்பட்டு வருவதகாத் தெரிவித்துள்ளார்.இன்னமும் இந்த உத்தேச சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது...
டக்ளசின் ஆயுதக் குழு தங்கியிருக்கும் வீடுகள், மற்றும் அவர்கள் புதைத்து வைத்துள்ள ஆயுதங்களையும் இராணுவமே தோண்டி எடுத்துவிட்டு அவை விடுதலைப் புலிகளின் ஆயுதம் என்று கூறிவருகிறது. இவ்வாறு நடக்க என்ன காரணம் ? டக்ளசுக்கும் கோட்டபாயவுக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளது. இன் நிலையில், டக்ளஸ் அரசால் ஏன் ஓரங்கட்டப்படுகிறார் என்பது தெரியாத , அவரது ஆயுதக் குழு குழப்பத்தில்
இலங்கையின் வட பகுதியில் நிலைகொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவின் ஆயுதக்குழுவிற்கு,...