சமூக வலைத்தளங்களை தடை செய்தால் எனது வீட்டில் புரட்சி ஏற்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம் (பேஸ்புக்) மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யும் நோக்கம் உள்ளதா? என டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, 'பேஸ்புக் தளத்தில் எனக்கு 300 ஆயிரம் விருப்பங்கள் உள்ளன. டுவிட்டரில் 25 ஆயிரம் பின்தொடர்பவர்களைத் தாண்டியுள்ளேன். இவ்வாறானதொரு நிலையில், நான் எப்படி...
  வெளிநாடுகளின் தேவையற்ற அழுத்தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதாக, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் கலாநிதி ஜோன் வில்லியம் ஆஷ்ஷிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள கலாநிதி ஜோன் வில்லியம் ஆஷ், நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தார். இதன்போது, முப்பது வருட யுத்தத்தின் பின் வெற்றி கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த தெளிவுபடுத்தினார். தற்போது நாட்டின்...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மீள உயிரூட்டும் முயற்சி முறியடிக்கப்பட வேண்டுமென பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை சர்வதேசத்தின் ஒத்தழைப்புடன் இல்லாதொழிக்க முடியும். சுதந்திரத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது புலி ஆதரவாளர்களும்,  அரச சார்பற்ற நிறுவனங்களும் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றன. புலிகளை வென்றெடுக்க முடியாது என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடாக அமைந்தது. எனினும் ஒரு சில ஆண்டுகளில் நாடு பாரிய அபிவிருத்தியை எட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இரத்தினபுரி, குருவிட்ட பிரதேசத்தில்...
தூக்கில் தொங்கிய நிலையில் தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தவத்தை தோட்டத்தில் நேற்று மாலை 5 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. கல்கந்தவத்தை தோட்டத்திலுள்ள லயன் அறையொன்றிலே சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். து.பத்மநாதன் என்ற 56 வயது நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார்...
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக சென்ரம் முகாமில் தங்கவைக்க ஏற்பாடுறுள்ள இரண்டு குடும்பங்களின் தாய்மார் அவர்களின் பிள்ளைகளுடன் மண்டபம் அகதிமுகாமில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த திங்கட்கிழமையன்று தனுஸ்கோடி பகுதிக்கு முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து இரண்டு குடும்பங்கள் படகுகள் மூலம் அகதிகளாக சென்றன. இந்த 10 பேர் அடங்கிய குடும்பத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட போது அவர்களை...
வடமாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக, தொலைபேசியில் தொடர்புகொண்டபொழுது, தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வி. கேள்வி :- திருகோணமலையில் நடைபெற்ற தெரிவுக்குழுக்கூட்;டத்தில் நீங்கள் புறக்கணிக்கப்பட்டதாக பல செய்திகள் வெளிவந்தன. இதுதொடர்பில் என்ன நடந்தது என்று கூறமுடியுமா? பதில்:- நான் ஜெனிவாவிற்கு சென்றுவந்த காலப்பகுதியில் வீரகே சரி பத்திரிகைக்கு தவறான முறை யில் செவ்வி வழங்கியிருந்தேன் என்றும், பிழையான அறிக்கைகளை பத்திரிகைகளில் வெளியிடக்கூடாது என்றும், கட்சியினருடைய அனுமதியின்றி...
புற்றுநோயால் கொழும்பில் உயிரிழந்த குழந்தையினது பூதவுடலை கொழும்பிலிருந்து எடுத்துச் செல்ல பெண் தொழிலாளர்கள் கைகொடுத்து முன்னுதாராணம் ஆகியுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் யாழ்.தளபதிகளுள் ஒருவராக இருந்தவர் மகேந்தி. அவருட்பட மூன்று பேர் குடும்பத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்தனர். அவர்கள் எவரும் தற்போது உயிருடனில்லை. இந்நிலையில் அவர்களது ஒரு சகோதரனான  யோகேந்திரன் தனது குடும்பத்துடன் வன்னியில் வறுமையில் வாழ்ந்து வருகின்றார். அவரது மகளான தமிழ்மதி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு போதிய சிகிச்சையின்றி உயிரிழந்துள்ளார்....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் தலைமையில் அனைத்துப் பீட பீடாதிபதிகளும் மாணவ ஆலோசர்களும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சிலரும் நேற்று (07.05.14) யாழ் இராணுவத் தரப்பை சந்தித்துள்ளதாக  தெரியவருகிறது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு நேற்றைய தினம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது. அத்துடன் பல்கலைக்கழக சமூகத்தை சேர்ந்த சிலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாட்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் நினைவுகூரப்படுகிறது....
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சிங்கள பௌத்த வாக்குகள் அவசியமானது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்கால பொது அல்லது ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்ளக் சுதந்திரக் கூட்டமைப்பை தோற்கடிக்க சிங்கள பௌத்த வாக்குகள் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிந்து அவருக்கு ஆதரவளிப்பதன் மூலம் மட்டும்...
சம்பூர் நிலப் பிரச்சினை: இழப்பீட்டுக்கு 300 மிலியன் ரூபாய் ஒதுக்கீடு இலங்கை அரசு, சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நிலக்கையகப்படுத்தல் முயற்சியில் நிலமிழந்த மக்களுக்கு, இழப்பீடு வழங்க 300 மிலியன் ரூபாய் ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இலங்கை உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் அரசு இந்தத் தகவலைத் தெரிவித்தது. சம்பூரில் இந்தப் பிரச்சினை காரணமாக இடம்பெர்ந்தோர் தாக்கல் செய்த மனு குறித்த விசாரணையில் அரச வழக்கறிஞர் இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அரசின் இந்தத்...