பள்ளிவாசலுக்கும் செல்வதற்கு தனக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும், அவ்வாறு தடை விதிக்கவும் முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார். தேசிய பொது வழிகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய காமினி ஜெயவிக்ரம பெரேரா, கசினோ சூதாட்ட சட்டத்துக்கு அஸ்வர் எம்.பி. ஆதரவு வழங்கியதாகவும் அவருக்கு பள்ளிவாசல்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த அஸ்வர் எம்.பி., அவ்வாறு எந்த...
சர்வதேச மட்டத்தில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்ற தம்புள்ளை பள்ளிவாசலின் ஒருபகுதி நேற்றிரவு வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிவாசல் கட்டடத்தை அண்டிய கட்டடங்கள் பாதை அபிவிருத்திக்காக பெக்கோ இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுவதாகவும், பெக்கோ இயந்திரங்கள் பள்ளவாசலை அண்டியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவற்றை பொலிசாரின் பாதுகாப்புடன் இனாமளுவே சுமங்கல தேரர் நேரடியாக நின்று வழிநடத்தி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புனித பூமி அபிவிருத்தி என்ற பெயரில் தம்புள்ளைப்...
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'குளோபல் டைம்' பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை:இந்தியாவில், பா.ஜ., சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பவர். குஜராத் மாநில முதல்வராக, அவர் பதவியேற்றபின், சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்தினார். பல சீன நிறுவனங்கள், குஜராத்தில் முதலீடு செய்து, அம்மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மோடி தலைமையில் அரசு அமைந்தால், சீனா இந்தியா இடையேயான நட்பு, மேலும் பலமடையும்....
இந்தியா- இலங்கை இடையிலான, விரிவான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, நேற்றுடன் முடிவடைந்தது. இலங்கை தலைநகர், கொழும்புவில் நடந்த இரண்டு நாள் பேச்சில், இந்திய வெளியுறவு துறை இணை செயலர் அமன்தீப் சிங் தலைமையில், அணுசக்தி துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இலங்கையின், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறை செயலர் தாரா விஜயதிலகே தலைமையில், அந்நாட்டு அணுசக்தி கமிஷன் மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகள்...
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த பணிப்பெண் மோனிகா லெவன்ஸ்கி முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுடன் கொண்டிருந்த உறவினை பற்றி பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவின் ”வேனிட்டி ஃபேர்” என்ற பிரபல பத்திரிக்கையில் மோனிகா, கிளிண்டன் தன்னுடன் வைத்திருந்த உறவை குறித்து பிரத்யேகமாக கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.இதுகுறித்து அவர் எழுதிய கட்டுரையில், எனக்கும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனுக்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து மிகுந்த வேதனை அடைகிறேன்.எனது கடந்தகாலம் குறித்த சர்ச்சைகளை...
ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் அகதிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் சாமோஸ் என்ற தீவிற்கு அப்பால் கடலில் மூழ்கியிருக்கின்றன.இந்த விபத்தில் 22 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததுடன், மேலும் பத்துப் பேர் காணாமல் போயிருப்பதாக கிரேக்க கரையோர காவற்படை அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 18 பேர் பெரியவர்கள், 4 பேர் குழந்தைகளும் அடங்கும்.
கடலில் தத்தளித்த சமயம் காப்பாற்றப்பட்ட 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் எந்த நாட்டைச்...
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மழை வெற்றிக்கு உதவியது என்று சென்னை அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த டெல்லி டேர்டெவில்சுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6–வது வெற்றியை பதிவு செய்தது.
இதில் 179 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி வெய்ன் சுமித் (79 , 51 பந்து, 4 பவுண்டரி,...
துபாய் கோல்ப் கிளப்பில் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.துபாயில் உள்ள புகழ்பெற்ற கோல்ப் அமைப்பான எல்ஸ் சச்சினுக்கு தனது அமைப்பின் நிரந்த உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதாக அறிவித்துள்ளது.
இது பற்றி பேசிய அவ்வமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான அப்துல் ரகுமான் பல்க்கானாஸ் கூறுகையில், விளையாட்டு உலகத்திற்கு சச்சின் செய்த பங்களிப்பு மகத்தானது.அவரது சாதனைகளை பாராட்டி இந்த கௌரவம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த சிறப்பு உறுப்பினர் அந்தஸ்து...
ராஜஸ்தான் சங்கத்தை காலவரையின்றி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து பிசிசிஜ மீதான தனது கோபத்தை சரத்பவார் வெளிப்படுத்தியுள்ளார்.ஐ.பி.எல். அமைப்பின் முன்னாள் தலைவர் லலித்மோடி முறைகேடு காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அவருக்கு ஆயுள்கால தடை விதித்தது.
இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் நடந்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தலில் லலித்மோடி போட்டியிட்டார். சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் நடந்த இந்த தேர்தலின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
இதில் லலித்மோடி வெற்றி...
திருமண பந்தத்திற்கு பிறகு ஆண் பெண் இருபாலரும் தங்கள் வாழ்க்கையை நல்லறமே இல்லறமாய் ஆரம்பிக்கின்றனர்.ஆனால் நாட்கள் செல்ல ஒருவருக்கொருவர் பிடிக்காத விடயங்கள் கண்களுக்கு தென்படுகின்றன.
இதில் மனைவிமார்கள், தங்கள் கணவருக்கு பிடிக்காத விடயங்களை மாற்றிக்கொள்ள சற்றே முயற்சிசெய்தாலும், கணவன்மார்கள் முயற்சி கூட செய்வதில்லை.
அந்த வகையில் கணவன்மார்களே உங்களிடம் மனைவிக்கு பிடிக்காத விடயங்கள் சில,
1. குளித்தால், கை,கால், முகம் கழுவினால் ஈரம் சொட்ட, சொட்ட வந்து வீட்டையே ஈரமாக்குவது. மொசைக் தரையாக...