விஜயகாந்த்தின் மகன் சண்முகப் பாண்டியன் நாயகனாக அறிமுகமாகும் படம் சகாப்தம். சில மாதங்களுக்கு முன்பே படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், தேர்தல் வேலைகள் இருந்ததால் படப்பிடிப்பை தள்ளி வைத்திருந்த விஜயகாந்த், இப்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சண்முகப் பாண்டியனுக்கு இன்னும் ஜோடி கிடைக்கவில்லையாம். என்ன ஒரு சத்திய சோதன இவருக்கு கோலிவுட் நாயகிகள் இப்படம் அரசியல் வட்டாரமாக இருக்கிறதே என்று யோசித்து கால்ஷீட் தராமல் இழுத்தடிக்க, அடி போங்கடி நீங்களும் உங்க...
சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் "அஞ்சான்". இப்படத்தை பற்றி ஏற்கனவே நமது "சினி உலகம்" இது "பாட்ஷா" படத்தின் தழுவலாக இருக்கும் என அறிவித்திருந்தது. அதை உண்மையாக்கும் விதத்தில் சமீபத்தில் வந்த ப்ரோமோ காட்சியும் அப்படிதான் இருந்தது. இப்போது "பில்லா", "துப்பாக்கி" படத்தில் வந்தது போல் சூர்யாவுக்கு ஒரு மாஸ் டயலாக் உள்ளதாம், அதையும் வெளியிட்டு இருக்கிறது படக்குழு. "நான் சாகுறதா இருந்தாலும் அத நான் தான்...
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிடில்டன் தோட்டத்தைச் சேர்ந்த சுப்பையா செல்வராஜ் தர்சன் குமார் (ராஜேஸ்கண்ணா) என்ற சிறுவனை காணவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவர் கடந்த மாதம் 19ம் திகதி இரவு 08 மணியளவில் காணாமல் போனதாக பெற்றோர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த சிறுவன் பெரியராணிவத்தை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 07இல் கல்வி கற்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவன் குறித்த தகவல் அறிந்தோர் லிந்துலை பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு...
வல்வெட்டித்துறை நகரசபை சபா மண்டபத்தில் நேற்றுப் பகல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சபையின் ஆளும் தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நான்கு பேரும், வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று மாலை 5 மணியுடன் போராட்டத்தைக் கைவிட்டனர். நேற்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் வல்வெட்டித்துறை நகர சபைக் கூட்டம் சபைத் தலைவர் ந.ஆனந்தராஜ் தலைமையில் ஆரம்பமானது. அவ்வேளை சபையின் உபதலைவர் க.சதீஸ்,...
நவீன ரயில்களில் கறுப்புப்பெட்டி பொருத்தப்பட்டிருப்பதனால் பொத்துஹெர சம்பவம் தொடர்பில் யார் குற்றவாளி என்பது விரைவில் தெரிய வரும். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான குற்றவாளி யாராக இருப்பினும் தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். இதேவேளை, பொத்துஹெர விபத்திற்கு ரயில் ஊழியர்களின் கவனயீனமே மூல காரணம். இச்சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளிலும் ஏனைய விசாரணைகளிலும் கறுப்புப்பெட்டி பெருமளவில் உதவும் எனவும் அவர் தெரிவித்தார். இது...
நாட்டின் நலனுக்காக தேசிய சக்திகள் வகுத்துள்ள பாதையில் அரசாங்கம் வரத் தவறினால் தாம் தமது பாதையில் தனியாகச் செல்லப்போவதாக அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். கொழும்பு சுகததாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அமைசச்சர் விமல் வீரவன்ச இந்த எச்சரிக்கையை விடுத்தார்.  அரசாங்கத்துக்கு 12 அம்சக் கோரிக்கை ஒன்றை முன்வைக்கும் தீர்மானம் ஒன்றும் இந்த மாநாட்டில்...
  கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படைவீரரொருவர், சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட மூவரிடமிருந்த பையை சோதனைக்கு உட்படுத்த முயன்றபோதே அந்த வீரரை தாக்கிவிட்டு பையையும் அவ்விடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். வெருகல் ஆறு கடற்படை முகாமில் கடமையாற்றும் வீரரொருவரின் மீது தாக்குதல் நடத்தியதுடன் ரி-56 ரக துப்பாக்கியை அவ்விடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடிய மூவரை கைது செய்யும் நோக்கிலேயே தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று கடற்படை அறிவித்துள்ளது. பொலிஸ்,இராணுவம் மற்றும் கடற்படை ஆகியன இணைந்தே இந்த தேடுதல் நடவடிக்கையை...
பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்- ஆயுதக் குழுக்களை வளர்த்து விட்டுப் பிராந்தியத்தில் அழிவை ஏற்படுத்திய  இந்தியாஇ போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கூட ஈழத் தமிழருக்கு காத்திரமான தீர்வைப்பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் வி.மகாலிங்கத்துக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர் சிற்றம்பலம், ஈழத் தமிழருக்கு இந்தியா மீதுள்ள அதிருப்தியைத் துணைத்தூதுவர் மகாலிங்கம் மத்திய...
  பயங்கரவாத நிதி கொடுக்கல் வாங்கல்களை தடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அவுஸ்திரேலியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலியா பிஷொப்பை, அந்நாட்டு பாராளுமன்றில் அமைச்சர் பீரிஸ் சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 1373ம் பிரகடனத்தின் அடிப்படையில் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், 424 தனிப்பட்ட நபர்களையும் தடை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இராணுவ,...
நாட்டில் காணப்படும் சிறைச்சாலைகளில் 6600 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் அடிப்படையில் 6600 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சீ.பல்லேகம தெரிவித்துள்ளார். கையடக்கத் தொலைபேசிகளுடன் 4323 சார்ஜர்களும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொருட்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சார்ஜர்களின் மொத்த எடை 367 கிலோ கிராம் எனத் தெரிவிக்கப்படுகிறது