இன்று நாம் காணவிருப்பது இசை துறையில் பிரபலமான பின்னணி பாடகராக திகழும் இளம் இளைஞர் 'யாசின் அவர்களை தான். கோலிசோட என்ற படத்தில் தன் வயது முதிர்ந்த பாடலான "ஜனனம் ஜனனம் " என்ற உத்வேக பாடலை படி பலரையும் மெய் சிலர்க்க வைத்தவர்.   1. சினிமா துறையில் நுழைந்த அனுபவம் பற்றி? நான் முதலில் பாடியது மலையாளத்தில் தான், என் அப்பாவுக்கு நான் பாடகராக ஆக வேண்டும் என்று ரொம்ப...
இரும்பு குதிரை படத்தில் பைக் ரேஸராக நடித்திருக்கும் லக்ஷ்மி ராய், அடுத்து சுந்தர் சிஇயக்கத்தில் "அரண்மனை" படத்தில் நடித்து வருகிறார். 'இரும்பு குதிரை' படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், "அரண்மனை" படமும் முடியும் தருவாயில் உள்ளது. இரும்பு குதிரை படத்தை போலவே அரண்மனை படத்திலும் தனக்கு முக்கிய கதாபாத்திரம் என கூறும் லக்ஷ்மி ராய், இப்படத்தில் எல்லா பசங்களும் அவர் பின்னாடியே சுத்துவாங்க எனவும் கூறியுள்ளார். இதற்காகவே, இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும்...
இலங்கை அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடைப்பட்டியலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குறித்த அமைப்புக்கள் மீது அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எனினும், இந்த தடையை தமது நாட்டில் அமுல்படுத்தப் போவதில்லை என பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தலமையிலான கனேடிய அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது....
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளங்களில் காணப்படும் சில அப்பிளிக்கேஷன்களை குறித்த கால இடைவெளியில் அப்டேட் செய்வது அவசியமாகும்.இதற்கு Windows Hotfix Downloader எனும் மென்பொருள் உதவுகின்றது. இந்த மென்பொருளானது இலகுவாகவும், புதிதாகவும் மற்றும் சரியானதுமான அப்டேட்களை தேடி தரவிறக்கும் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Windows 8.1, Windows 8, Windows 7 இயங்குதளங்கில் செயற்படக்கூடிய இம்மென்பொருள் Microsoft Office அப்ளிக்கேஷன்களையும் அப்டேட் செய்யும் வசதியினை கொண்டுள்ளது. தரவிறக்கச் சுட்டி
  சில மாதங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் தனது Android இயங்குதளத்தின் பதிப்புக்கள் பயன்படுத்தப்படும் சாதனங்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது.இதில் இறுதியாக வெளியிடப்பட்டிருந்த Android KitKat இயங்குதளம் மிகவும் குறைந்தளவு சாதனங்களிலேயே பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும் தற்போது மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் 5.3 சதவீதமாகக் காணப்பட்டதுடன் இம்மாதம் உயர்வடைந்து 8.5 சதவீதத்தினை எட்டியுள்ளது. இவற்றில் Android Jelly Bean பதிப்பே தொடர்ந்தும் முன்னிலையில் காணப்படுவதுடன்,...
அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் மொபைல் சாதனங்களை லாக் செய்வதற்கு விசேட அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.இவ்வாறு லாக் செய்வது இலகுவாகவும், பயனர்களை வெகுவாக கவர்ந்ததாகவும் இருக்கின்றது.இதனைப் போன்றே விண்டோஸ் மற்றும் அப்பிளிக் மேக் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய கணனிகளையும் லாக் செய்வதற்கு Eusing Maze Lock எனும் அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.  
வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான முறுகல் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், வடகொரியாவுக்கு எதிராக தென்கொரிய மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹீலியம் நிரப்பப்பட்ட பெரிய அளவிலான மிதக்கும் பலூன்களின் மூலம், வட கொரியாவுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை அந்நாட்டிற்குள் அனுப்பி தென் கொரிய ஆதரவாளர்கள் நேற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட கொரியாவில் இருந்து வெளியேறியவரும், தென் கொரியாவின் தற்போதைய ஆதரவாளருமான பார்க் சாங்...
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, விண்வெளி வீரர்கள் வருங்காலத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அணிந்து செல்லும் உடையினை அறிமுகப்படுத்தியுள்ளது.விண்வெளி பயணத்திற்காக நாசா 3 வடிவங்களை உருவாக்கியது. அது குறித்த அறிவிப்பினை கடந்த புதன்கிழமை நாசா வெளியிட்டது. பின் அது பொது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. அதில் இசெட்-2 என்ற விண்வெளி உடை 62 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டது. இந்த உடை தொழில்நுட்பம் நிறைந்ததாக, வருங்காலத்தில் நாள்தோறும் அணியும் உடை போன்று காட்சி தருவதாக வடிவம்...
யாழ்ப்பாணம், அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாள் வீச்சு சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோரே இந்த சம்பவத்தில் பலியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்குணானந்தம் அருளநாயகி (50), யசோதரன் மதுஷா(27), நிர்குணானந்தம் சுபாங்கன்(19) ஆகியோரே பலியானவர்களாவர். பலியானர்வர்களின் சடலங்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான இருவர் யாழ்ப்பாண போதனா...
இத்தாலியின் மிலானோ நகரிற்கு அருகாமையில், சினிசல்லோ பால்சோமா பிரதேசத்தில் இலங்கையர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டினுள் உயிரிழந்த நிலையில் இருந்த இலங்கையரின் சடலத்தை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். இத்தாலி குடியுரிமைப் பெற்றுக் கொண்ட குறித்த நபருடன், இலங்கையைச் சேர்ந்த தம்பதியினரும் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலை தொடர்பில் குறித்த தம்பதியினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்களை பொலிஸார் இதுவரையில்...