உக்ரைன் நாட்டில் அரசு கட்டிடத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதில் சிக்கி 31 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
கிழக்கு உக்ரைனில் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் அரசு கட்டிடங்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் வெளியேற மறுத்து விட்டனர். அவர்களை தனது செல்வாக்கை பயன்படுத்தி ரஷியா வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தித்தாலும், ரஷியா இதில் தனக்கு தொடர்பே இல்லை என்கிற வகையில் நடந்து கொண்டு...
தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச பணிமனை இன்று காலை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மித்ததாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சோ.சேனாதிராசா, க.சுரேஸ் பிரேமச்சந்திரன், ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், கந்தையா சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், பா.கஜதீபன் ஆகியோருடன் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பிரதித்தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அலுவலகத்துக்கான...
இலங்கையில் மிகப்பெரிய மருத்துவமனையான 10 மாடிகளைக் கொண்ட இராணுவ மருத்துவமனையை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திறந்து வைக்கவுள்ளார்.
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இந்த இராணுவ மருத்துவமனை 6542.4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையே இலங்கையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையாகும்.
இந்த இராணுவ மருத்துவமனை 1024 படுக்கைகளைக் கொண்டுள்ளது. அதேவேளை, சிறிலங்காவின் மிகப்பெரிய மருத்துவமனையாக விளங்கிய சிறிஜெயவர்த்தனபுர தேசிய மருத்துவமனை 1021 படுக்கைகளை மட்டுமே கொண்டதாகும்.
இந்த மருத்துவமனையில் இலங்கையின் முப்படையினர்,...
அப்பாடா...ஒரு வழியா எலக்சன் முடிஞ்சுது, ஓட்டு போடுவது நம் கடமைன்னு சொன்ன, பல பேர் விரல்ல மை வச்ச போட்டோவ "பேஸ்புக்", "ட்விட்டர்" ல போஸ் கொடுக்குறதுக்கு தான்பா ஓட்டே போட்டு இருக்கானுங்க..
அது எங்க வீட்டு பக்கத்துல இருக்க சின்ன பையன் ஒருத்தன் சிவப்பு மை, பச்சை “மை”ய கைல வச்சு காட்டிகிட்டு இருக்கான்...அது கூட பரவா இல்லைங்க மை எனக்கு வைக்க மறந்துட்டானுங்கனு வெறும் விரல காட்டிகிட்டு...
மோடி பிரதமர் ஆவதை தடுக்க 3–வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவை அளிக்கும் பிரகாஷ் கரத் நம்பிக்கை
Thinappuyal -
தேர்தலுக்கு பின்பு மோடி பிரதமர் ஆவதை தடுக்க 3–வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவை அளிக்கும் என்று மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் கரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
காங்கிரஸ் ஆதரவு தரும்
தேர்தலுக்கு பின்பு 3–வது அணியின் தலைமையிலான மதசார்பற்ற அரசு அமையும் சூழ்நிலை உருவானால் அப்போது காங்கிரஸ் முக்கிய பங்காற்றும் சூழ்நிலை ஏற்படும். மத்தியில்...
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்காக சீனுராமசாமி இயக்கும் படம், இடம் பொருள் ஏவல். இந்தப் படத்தில் முதலில் விஜய் சேதுபதி ஜோடியாக வழக்கு எண் ஹீரோயின் மனீஷா நடிப்பதாக இருந்தது. இடையில் சீனு ராமசாமிக்கும், மனீஷாவுக்கும் ஏதோ ஒரு காரணத்துக்காக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனீஷா விலகிக் கொண்டார். அடுத்த நாளே அவரது கேரக்டருக்கு அட்டக்கத்தி நந்திதா தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கியது. மனீஷாவின் வாய்ப்பை பறிக்க நந்திதா...
ஆப்கானிஸ்தான் வட கிழக்கு மாநில பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 2000 பேர் மண்ணுக்குள் கண் இமைக்கும் நேரத்தில் புதைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. பல ஆயிரம் பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது.
ஆப்கான் பதக்ஷான் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட மலைப்பகுதி பெயர்ந்து...
வீரம் படத்தை தொடர்ந்து கவுதம்மேனன் இயக்கும் படத்தில் அஜீத் நடக்கிறார். இதற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆயிரம் தோட்டாக்கள், துடிக்குது புஜம் போன்ற பெயர்களை பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஆக்ஷன் படமாக தயாராகிறது.
‘நாலு நாள்ல ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாடும் எனக்கு மட்டும் அன்னைக்கு தீபாவளிடா’ என்று அஜீத் பேசும் பஞ்ச் வசனம் படத்தில் உள்ளது. படப்பிடிப்புக்காக புனே சென்ற...
ரஜினியின் ‘கோச்சடையான் படம் வருகிற 9–ந் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்த படம் வெற்றி பெற ராமேஸ்வரம் கோவிலில் ரஜினி ரசிகர்கள் 1008 சங்கு பூஜை நடத்தினார்கள். ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் பாலநமச்சி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினராக பரிவார் பவுண்டேஷன் ஜெனரல் மானேஜர் தெய்வம் மற்றும் ரஜினி மன்ற நிர்வாகிகள் சிவகாசி ரமேஷ், மாரி பிச்சை, முருகன், சசிகுமார், குணா,...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் பதவி ஏற்கவுள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த டேவ் வாட்மோரின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய பயிற்சியாளர் தேடுதல் வேட்டையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரப்படுத்தியது.
இப்பொறுப்புக்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிசும் விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து...