பீரங்கிகளைத் தொட்டு சுட்டுப்பழகியவர்கள் நாம், விளையாட்டு துப்பாக்கிகளுக்கு அஞ்சப்போவதில்லை:
Thinappuyal News -0
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலொன்று நடைபெறுமானால் தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டைவிட்டு தப்பியோட வேண்டிய நிலை வரும். பீரங்கிகளைத் தொட்டு சுட்டுப்பழகியவர்கள் நாம், விளையாட்டு துப்பாக்கிகளுக்கு அஞ்சப்போவதில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை புத்ததாஸ மைதானத்தில் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது மேதினக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயகக் கட்சித் தலைவருமான சரத் பொன்சேகாவே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு...
சேமிப்புவாரத்தினை முன்னிட்டு நெடுங்கேணி சமுர்த்தி வங்கிச்சங்கத்தினரின் விளையாட்டுப்போட்டி
Thinappuyal -
வவுனியா வடக்கு நெடுங்கேணி சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் 2014 சேமிப்பு வார்தினை முன்னிட்டு அங்கத்தவர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி இன்றையதினம் (02.05.2014) வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு.பரந்தாமன் அவர்களின் தலைமையில் நெடுங்கேணி கதிர்வேலாயுத சுவாமிகள் முருகன் ஆலய முன்னறலில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் நிகழ்வின் இறுதியில் போட்டிகளில் கலந்துவெற்றிபெறுபவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- நமது நிருபர் -
பௌத்த, மத விவகார அமைச்சின் அனுமதியின்றி எந்த வழிபாட்டுத்தலத்தையும் அமைக்க முடியாது! – புதிய சட்டம்
Thinappuyal News -
பௌத்த மற்றும் மத விவகாரங்கள் அமைச்சின் அனுமதியின்றி இனிமேல் நாட்டில் எந்த வழிப்பாட்டுத் தலங்களையும் அமைக்க முடியாது என அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் 20 ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. அவற்றில் 10 ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் பௌத்த வழிப்பாட்டுத் தலங்கள். புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படும் போது வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. சட்டத்திற்கு அப்பால் சென்று மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளினால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நாட்டு மக்கள்...
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தன்னிட்சையாக செயற்பட்டார் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் சர்ச்சையை ஏற்படுத்திய மேதின உரை-
Thinappuyal News -
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சுற்றி வளைத்த நிலையில் அவர் அவசர அவசரமாக பொலிஸாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளார்.
சாவகச்சேரியில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தன்னிட்சையாக செயற்பட்டார் என்று பொருள்பட பேசியதாக விளங்கிக் கொண்ட இளைஞர்கள் சிலர் தேர்தல் காலத்தில் பிரபாகரன் மாவீரன் இப்போது சர்வாதிகாரியா என கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் தனது உரையினை முடித்துக்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளியேற முற்படுகையில்...
ஆண்டான்டு காலங்கலாக வாழ்ந்துவருகின்ற மக்களின் சுயநிர்ணயங்களில் ஒன்றான தொழில் தர்மத்தை உலக அரங்கிற்கு காட்டும் ஒன்றாக இந்த உழைப்பாளர் தினம் அமைகின்றது. உலகெங்கிலும் நெற்றி வியர்வைசிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தினப்புயல் பத்திரிகை சிரம்தாழ்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. போரின் அடிமைவிலங்கினை உடைத்து சுதந்திரக்காற்றை சுவாசிக்காத போதிலும் மனித வாழ்க்கையில் உழைப்பு என்பது இன்றியமையாததொன்று. நாட்டின் சுதந்திரம் இறையாண்மை பேணப்பட்டு வராதபோதிலும் தொழிலாளர்களின் முயற்சிகளின் மூலமே இன்று ஒவ்வொரு நாடும்...
தொழலாளர்களின் சர்வதேச தொழிலாளர் தினம் இன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் 80 ஆவது தொழிலாளர் தினம் நாடாளவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக
மட்டக்களப்பு,
அம்பாறை,
கிண்ணியா,
வவுனியா,
திருக்கோவில்,
கிளிநொச்சி,
கண்டி,
கல்முனை,
தலவாக்கலை ஆகிய இடங்களில் இடம் பெற்ற நிகழ்வுகளின் தொகுப்புக்கள் இங்கே இணைக்கப்படுகின்றது.
கண்ணாட்டிக் கணேசபுரத்தில் மினிசூறாவளியினால் 150 குடும்பங்கள் பாதிப்பு – வடமாகாண சுகாதார அமைச்சர் நேரில் விஜயம்
Thinappuyal -
செட்டிக்குளம் பிரதேசசபைக்குட்பட்ட கண்ணாட்டிக் கணேசபுரத்தில் நேற்று முன்தினம் (29.04.2014) அன்று கடும் மழை காரணமாக மினி சூறாவளி ஏற்பட்டமையினால் 150 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் அவர்கள் இடம்பெயர்ந்து பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 57 குடும்பங்களினது வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. வீடுகளின் தகரங்கள் சூறாவளியினால் சேதமாகியதுடன், மண்ணால் கட்டப்பட்ட வீடுகள் இடிந்துள்ளதுடன் இவற்றை சரிசெய்வதற்கு ஒரு குடும்பத்திற்கு 20000 ரூபாய்கள் வரைதேவைப்படுகின்றது. தற்பொழுது அனர்த்தமுகாமைத்துவ பிரிவினால் மூன்று நாட்களுக்கு தேவையான...
தொழிலாளர் தினமாகிய இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிகழ்வுகளும், அரசியல்வாதிகளின் கருத்துக்களும்.
Thinappuyal -
உலகத்தொழிலாளர்களை ஒன்றுசேருங்கள் - புதிய ஜனநாயக மாக்சிச லெணிணிசக்கட்சி
தொழிலாளர்கள் தினமான மே 01 இனை முன்னிட்டு வவுனியாவில் (01.05.2014) இன்று காலை 9.30 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிச லெணிணிசக்கட்சியினரினால் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. இப்பேரணியானது வவுனியா அரச பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு வவுனியா நகரசபை மண்டபத்தை சென்றடைந்தது. அத்தோடு வவுனியா நகரசபை மண்டபத்தில் நா.தேவகிருஸ்ணன் (சமூக நீதிக்கான வெதுஜன அமைப்பாளர்) தலைமையில் சிறப்புரை நடைபெற்றது. ஐக்கியப்பட்ட தொழிலாளர்கள்...
ராஜபக்ஷக்களின் அசுத்த ஆட்சியிலிருந்து மக்களை மீட்டெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். உழைக்கும் மக்களுக்கு நிவாரங்கள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். உழைக்கும் மக்களுக்கு விடிவினை ஏற்படுத்த சகல முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பல்லாயிரக் கணக்கான துன்பியல் அனுபவங்களினால் உழைக்கும் மக்கள் உழலுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்....
சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து தொழிலாளர் தோழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் – ஜனாதிபதி
Thinappuyal News -
சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து தொழிலாளர் தோழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உழைக்கும் வர்க்கத்தினரின் மிக முக்கியமான தினமான மே தினத்தில் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார். மிகவும் சுதந்திரமானதும், ஜனநாயகமானதுமான முறையில் மே தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட தொழிலாளர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கக் கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் நிலையான அபிவிருத்தியை நோக்கி நகர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த...