குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா நசீம். மலையாளத்தில் இருந்து 'நேரம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ஜெய்யுடன் இவர் நடித்த திருமணம் எனும் நிக்காஹ் படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அதற்கு அடுத்தப்படியாக எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை. 19 வயதான நஸ்ரியாவுக்கும், மலையாள இயக்குநர் பாசில் மகனும்,...
சீனிவாசன், தோனி உள்ளிட்ட 13 பேர் மீதான புகாரை முத்கல் குழு விசாரிக்க, பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது. ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் சூதாட்டம் குறித்து, நீதிபதி முத்கல் குழு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கை அளித்தது. இதில், தோனி, சீனிவாசன் உள்ளிட்ட 13 பேர் மீது புகார் கூறப்பட்டது. ...
சர்வதேச நிதியத்தின் அடுத்த, நிர்வாக இயக்குனராகும் வாய்ப்பு, சிங்கப்பூரை சேர்ந்த தமிழர், தர்மன் சண்முகரத்தினத்திற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு சிதிலமடைந்த சர்வதேச நாடுகளின் பண பட்டுவாடா முறையை சீர் செய்ய, சர்வதேச நிதியம், 1945ல் துவக்கப்பட்டது. இந்த அமைப்பின் நிர்வாக இயக்குனராக இருப்பவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, கிறிஸ்டின் லாகார்டே. கடந்த 2011ல், இந்த பொறுப்புக்கு வந்த லாகார்டே, 2016 வரை அப்பதவியில் இருப்பார்....
பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லைகளில் அத்துமீறலில் ஈடுபட்டால், அதை அமெரிக்கா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. எல்லை விவகாரங்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது,'' என, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, நம் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளை, சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசம் மட்டுமின்றி, ஜம்மு காஷ்மீரின் பனிசூழ்ந்த மலைப் பகுதிகளில் சிலவற்றையும், சொந்தம்...
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த அன்பைப் பற்றிய அபிப்பிராயம் ஒன்று போல இருப்பதில்லை. ஆண்களிடம் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு மிகவும் முக்கியமானது மற்றும் நாம் அவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். நம்பிக்கையுடன் இருந்தால், பெண்கள் எளிதில் காதல் வயப்படுவார்கள். அதனால் அவ்வளவாக அன்பில்லாத ஆண்களிடம் தங்களுடைய மனதைப் கொடுத்து விடுவார்கள். எனவே தான், ஒரு புதிய உறவை ஏற்படுத்தும் போது புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். பொதுவாகவே பார்க்க நன்றாக...
மது விருந்தில் நிர்வாண நடனம் ஆடியதாக நடிகை சன்னிலியோன் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சன்னிலியோன் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் வடகறி படத்தில் ஜெய்வுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி உள்ளார். புனேயில் உள்ள வைர வியாபாரி வீட்டில் நடந்த மது விருந்தில் சன்னிலியோன் நிர்வாண நடனம் ஆடியதாக இண்டர் நெட்டில் படங்கள் வெளியாகி உள்ளது. இந்த விருந்தில் கவர்ச்சியாக நடனமாடியபடி வரும் அவர் ஒரு...
பாலாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் ‘பரதேசி’. இப்படத்தில் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாகவும், வேதிகா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன், உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் தமிழில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளது. இந்நிலையில், நார்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் இந்த படத்துக்கு 4 விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த படம், சிறந்த இயகஇ்கம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகர் என விருதுகளை...
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடும் தொனியிலான சரமாரியான விமர்சனங்களை முவைத்தார். பெருக்கெடுத்த கண்ணீரூடே தனது உரையினை இடைநிறுத்தினார் அனந்தி சசிதரன். இன்று காலை திருகோணமலைக்கூட்டம் தொடங்கியது முதல் சம்பந்தன் கட்சி தலைமையின் அனுமதியின்றி அனந்தி ஜெனீவா சென்றமை மற்றும் அங்கு அவர் ஆற்றிய உரைகள் தொடர்பில் திரும்ப திரும்ப பேசியவாறிருந்தார். இந்நிலையில் அவரது குற்றச்சாட்டுக்களிற்கு மதிய உணவு...
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பான விவகாரம் நேற்றறைய திருகோணமலை கூட்டத்தில் காரசாரமான விவாதத்தினை தோற்றுவித்திருந்த நிலையில் பதிவு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிறேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுமந்திரனுடன் மாகாணசபை உறுப்பினரான சித்தார்த்தன் ஆகியோர் இக்குழுவில் உள்ளடங்கியுள்ளனர். நேற்றைய தினம் மாலை திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமைப்பின் உயர்மட்டக்கூட்டத்தில் கூட்டமைப்பின் வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபையினது உள்ளக பிரச்சினைகள்...
மாணவிகளுக்கு இராணுவம் பாலியல் தொல்லை மாணவிகளின் முன் கீழ் ஆடையைக் அவிழ்த்து நிற்கும் படையினர் - கிளிநொச்சி முறிப்பு பகுதியில் உள்ள தெருவோரமாக முகாமிட்டுள்ள இராணுவத்தினர் அந்த வழியால் போய்வரும் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அங்கிருந்து மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குறித்த வழியால் பயணம் செய்;யும் மாணவிகள் பெரும் இடர்பாடுகளுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி முறிப்பு, கோணாவில் முதலிய பகுதிகளை அண்டி இராணுவத்தினர்...