நிர்மாணம், இயக்கம் மற்றும் மாற்றுகை (பிஓடி) என்ற திட்டத்தின் வடக்குக்கான அதிவேக பாதை அமைப்புக்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பில் தற்போது சீன நிறுவனம் ஒன்றுடன் பேச்சுக்கள் இடம்பெறுவதாக பெருந்தெருக்கள் துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிரேமஸ்ரீ தெரிவித்துள்ளார். இந்த பாதை தம்புள்ளையில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. இந்தப்பாதை எந்தரமுல்ல என்ற இடத்தில் இருந்து ஆரம்பிக்கும். அத்துடன் கொழும்பின் சுற்றுப்புற பாதைகளான கம்பஹா, மீரிகம, குருநாகல் முதல் தம்புள்ளை ஆகிய இடங்களில் வெளியேறும்...
இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்கள், தாதியர் பயிற்சி நெறிறை வெற்றிக்கரமாக முடித்துக்கொண்டதாக இராணுவத்தின் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிப்பெற்ற 10 தமிழ் பெண்களுக்கு அண்மையில் கிளிநொச்சி இராணுவ படைத்தளத்தில் வைத்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக இந்த பயிற்சியின்போது தமிழ்பெண்களுக்கு முதலுதவிகள், சத்திரசிகிச்சையின் போது மேற்கொள்ளப்படும் உதவிகள், முகாமைத்துவம் உள்ளிட்ட பல விடயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இதன்போது பயிற்சிகளில் சிறப்பாக செயற்பட்ட ஆர்.இன்சார்,  பி.சிபோரா மற்றும் பி.பிரிசில்லா ஆகியோருக்கு விருதுகளும் வழங்கப்பட்டதாக இராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது  
வரணிப் புதைகுழிகள் மூடப்பட்டன!! இரவுபகலாக கனரக வாகனங்கள் சகிதம் லங்கை இராணுவத்தின் தென்மராட்சியின் முக்கிய படைத்தளமாக இருந்ததும் முன்னைய முன்னரங்க நிலையான முகமாலைக்கான விநியோக தளமாகவும் இருந்த வரணிப் புதைகுழிகள் மூடப்பட்டன. இரவுபகலாக கனரக வாகனங்கள் சகிதம் மூடப்பட்டன. படைத்தளத்தினிலிருந்த பாரிய வெளியாகியுள்ளது. இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் 1996ம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்ட வேளையினில் பருத்தித்துறை – கொடிகாமம் வீதியினில் வரணியினில் பெருமளவு நிலப்பரப்பினை ஆக்கிரமித்து 522 வது படைத்தளம் அமைக்கப்பட்டிருந்தது....
  வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தின் வெடிவைத்தகல் காட்டுப் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் விமானிகளில் ஒருவரும் அந்த அமைப்பை மீன்டும் இலங்கையில் உருவாக்க முன்னின்றவர் எனவும் பாதுகாப்பு தரப்பால் அடையாளப்படுத்தப்பட்ட தேவியன் பயன்படுத்தியதாக கூறப்படும் வேன் வண்டியை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ். நல்லூர் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வேனானது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட குறித்த வேனானது...
ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் இராணுவத்தினரின் ஆனையிறவுப் படைத்தளம் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது. 1999இன் நடுப் பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, “புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்” என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு...

    இலங்கையின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வியாளர்களை சர்வதேச மட்டத்தில் தரமுயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக கல்வியாளர்கள் மத்தியில் சுற்றுநிருங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் இந்த திட்டத்தை இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் வரவேற்றுள்ளது. இந்த சுற்றுநிருபங்கள் இந்த மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகின்றன. உதவி விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள் ஆகியோர் கட்டாயமாக முதுமாணி அல்லது கலாநிதி பட்டயங்களை கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட...
வடக்கில் உள்ள அனைவரும் புலிகளே. புனர்வாழ்வு வழங்கினாலும் புலித் தீவிரவாதிகளின் கொள்கையை அழிக்க முடியாது என்று குற்றம் சுமத்திய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வடக்கில் உள்ள அனைத்து புலிகளையும் கொன்று குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. வடக்கில் புலிகள் மீள உருவாகி வருவதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். விடுதலைப் புலி தீவிரவாதிகள்...
 இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் ஒன்றை எட்ட வைப்பதற்கு தென்னாபிரிக்கா எடுத்து வரும் முயற்சிகளில் சிக்கல் தோன்றியுள்ளது. தென்னாபிரிக்கா பக்கச் சார்பாக நடக்க முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் அரச தரப்பினரிடம் திடீரென ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைதி முயற்சிகளில் ஒரு மூன்றாம் தரப்பாக ஈடுபடுமாறு தென்னாபிரிக்காவுக்கு இலங்கை அரசே அழைப்பு விடுத்திருந்தது. கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின்...
பதினாறு புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டு அவர்களது பெயர்ப்பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாட்டாளர் ஒருவரிடம் தினப்புயல் பத்திரிகை தொலைபேசியில் செவ்வி கண்டபோது... கேள்வி :- இலங்கை அரசாங்கத்தினால் 16 புலம்பெயர் நாட்டின் அமைப்புக்கள் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கனே டியத் தமிழர் பேரவையும் ஒன்றாகும். இந்நிலையில் இலங்கையின் இத்தடை அறிவிப்பானது கனடாவில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது? பதில்:- இலங்கைத் தமிழ்மக்களுக்கு ஆதரவாகக் குரல்...
பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர் என்றும் சாத்தானை விட பெரிய சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த உண்ணா நோன்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போது இலங்கையில் நடக்கும் விடயங்களே நடந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கு இருட்டில் இருந்து...