வாலி படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்கள் நடித்து முன்னணி வரிசையில் இடம்பிடித்த ஜோதிகா, மொழி, சந்திரமுகி ஆகிய படங்களில் சிறந்த நடிகை விருதையும் பெற்றிருந்தார். ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வைத்திருந்த இவர் திடீரென திருமணத்தில் குதித்து பின் நடிப்புக்கு முழுக்கு போட்டது அனைவரின் மனதிலும் புயலடிக்க செய்தது.தற்போது மீண்டும் ஜோதிகா ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது பசங்க திரைப்படத்தை இயக்கிய பாண்டிய ராஜ்...
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்". இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் "சோலார் ஸ்டார்" ராஜகுமாரன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் புதிய தகவல் ஒன்று வெளி வந்துள்ளது. அது என்னவென்றால் நம்ம "பவர் ஸ்டார்" இதில் இருக்கிறாராம். நீண்ட நாள் சந்தானம் இது பற்றி வாய் துறக்கவே இல்லை, ஆனால் இந்த செய்தி எப்படியோ கசிந்து விட்டது. "பவர் ஸ்டார்" கண்ணா லட்டு திங்க...
கடந்த இரண்டு வருடமாக படங்களை இயக்காமல் இருந்த பார்த்திபன் தற்போது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற பெயரில் புதிய படம் இயக்கி வருகிறார். தன் படங்களில் புதுமையான எண்ணங்களை கொண்டு நிறைய ஹிட் படங்களை கொடுத்தவர் என்றே சொல்லலாம். இவர் கதையே இல்லாமல் ஒரு படத்தை இயக்குகிறேன் என்று சொல்லி அமலாபால், ஆர்யா, டாப்ஸி, விஜய் சேதுபதி, விஷால் என ஒரு சினிமா வட்டாரத்தையே வைத்து படம் இயக்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில்...
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்து விட்ட இடத்தை பிடித்தார் நயன்தாரா. இவர் நடித்த "ஆரம்பம்", "ராஜா ராணி" போன்ற படங்கள் வெற்றி அடைந்து பல முன்னணி நடிகர்களின் கவனத்திற்கு வந்தார். இவர் இப்போது நடித்து கொண்டு இருக்கும் படம் "நண்பேன்டா", இதில் உதய நிதியுடன் "கதிர்வேலன் காதலை " தொடர்ந்து இதிலும் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தில் நடிகையாகவே தோன்றும் கதாபாத்திரத்தில் சில நடிகைகளை உதயநிதி அணுகியுள்ளார். முதலில் ஹன்சிகாவிடம் கேட்டதற்கு தன்...
புரோக்ரேட்டஸ் என ஒரு கொடூர அரக்கன் இருந்தானாம். பகல் நேரத்தில் தன் வீட்டின் வழியே யார் போனாலும் அவர்களைக் கூப்பிட்டு, ராஜ  உபச்சாரம் செய்து, விருந்தளித்து அனுப்புவானாம். அதுவே இரவு ஆனால் போதும்... நபர்களைப் பிடித்து தன் அறையினுள் உள்ள ஸ்பெஷல் கட்டிலில் படுக்க வைப்பானாம். அப்படிப் படுப்பவரின் உடலானது, கட்டிலைவிட நீளம் குறைவாக இருந்தால், கை, கால்களை அசுரத்தனமாக இழுத்து  நீட்டிவிடுவானாம். நீளம் அதிகமாக இருந்தால், அவரது...
இந்தக் காலத்தில் கணவன் - மனைவி இருவரும் சம்பாதிக்கும் குடும்பங்களில் திருமண முறிவு என்பது வெகு இயல்பான விஷயமாகிப் போய்விட்டது என்கிற நிதர்சனம், நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏன் இந்த மன, மண முறிவுகள்? நீதிமன்றத்துக்கு விவாகரத்துக் கேட்டு செல்வது தவறு என்கிற சிந்தனை, போன தலைமுறையில் இருந்தது. விவாகரத்துக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்கிற சிந்தனையுடன்தான் வாழ தலைப்பட்டிருக்கிறது இந்தத் தலைமுறை. இந்தத் தலைமுறையினர், பார்த்ததும் காதலிக்கிறார்கள். குடும்பம்...
புதுடில்லி: நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த ‘பத்ம பூஷன்’ விருது பெற்றார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்.இந்தியாவின் சீனியர் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், 40. இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் (8 ஆண்கள் இரட்டையர்,6 கலப்பு இரட்டையர்) பட்டம் வென்றுள்ளார். ஏற்கனவே ராஜிவ் கேல் ரத்னா, அர்ஜுனா விருது பெற்றுள்ளார். நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து ‘பத்ம பூஷன்’ விருதை பெற்றார். இது குறித்து இவர் கூறியது: பத்ம பூஷண் விருது பெற்றது...
 பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா வழங்கி வரும் ராணுவத்துக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் அதிக அளவில் செயல்பட்டு வருவதால், அவர்களை ஒடுக்குவதற்காக, அமெரிக்கா, 2009ல், பாகிஸ்தானுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்தது. பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க வகை செய்யும், "கெர்ரி-லூகர் பர்மன்' மசோதாவில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டு உள்ளார். இந்த மசோதாவின்படி, ஐந்து ஆண்டில், 45 ஆயிரத்து 847 கோடி ரூபாய்,...
அமெரிக்காவில், ஆளில்லா விமானம் மூலம், ஆயிரம் ஆண்டு பழமையான கிராமம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எதிரிகள் முகாம்களை கண்காணிக்கவும், வாடிக்கையாளர்கள் வாங்கிய பொருட்களை, அவர்களது வீட்டிற்கு கொண்டு சேர்க்கவும், ஆளில்லா விமானங்கள் தற்போது, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்க தொல்லியல் துறை ஆய்வாளர்கள், ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி, நியூ மெக்சிகோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு கிராமத்தை கண்டுபிடித்து உள்ளனர். இதுகுறித்து, புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர், ஜான் கென்ட்னர் கூறியதாவது: நியூ மெக்சிகோவில், சாகோ...
  சில வருடங்களுக்கு முன்புவரை தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருந்தார் த்ரிஷா. முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்ட த்ரிஷாவை அண்மைக்காலமாக எல்லா ஹீரோக்களுமே ஒதுக்க ஆரம்பித்துவிட்டனர். எனவே, கன்னடப் படங்களில் நடிக்கும் அளவுக்கு த்ரிஷாவின் மார்க்கெட் கவலைக்கிடமாகிவிட்டது. எனவே இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாரம் த்ரிஷா. அதற்காக புதிய டெக்னிக்கையும் கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறாராம். அதாவது, இளம் ஹீரோக்களை டார்கெட் வைத்து அவர்களை...