பொதுபலசேனா மனிதத் தன்மைக்கு ஒவ்வாத காரியங்களில் ஈடுபடுகிறது -
மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்கள் இருவரும் தேசத்துரோகக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள பொதுபலசேனா அமைப்பு அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி, காவல்துறையினரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருக்கின்றது.
இது குறித்து கருத்து வெளியிட்ட மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், அவர்களுடைய கூற்று அர்த்தமற்ற கூற்று என்று நிராகரித்திருக்கின்றார்.
'பொதுபலசேனா எல்லா விடயங்களிலும் தலையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்....
16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் 424 புலம்பெயர் தமிழர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டமையானது, அவர்களை கைது செய்வதற்கான அறிவித்தலோ அல்லது தடை உத்தரவோ கிடையாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 424 தமிழர்கள் தொடர்பான வர்த்தமானி பிரசுரம் தொடர்பில்...
சென்னையில் வாக்களித்த இளம் வாக்காளர்கள்
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் அறிவித்துள்ளார். தபால் வாக்குகளின் எண்ணிக்கை தெரிந்த பிறகு நாளை சரியான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தற்போதைய நிலவரப்படி வாக்குப்பதிவு 82.18 சதவீதமாக இருந்தது.
தர்மபுரியில் அதிகபட்ச வாக்குப்பதிவு; சென்னையில் குறைவான வாக்குப்பதிவு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தர்மபுரி தொகுதியில் அதிகபட்சமாக 80.99...
சேலம் : பெண்களை வலையில் வீழ்த்திய காமகொடூரன் பயன்படுத்திய, லேப்-டாப், மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் பதிவாகியிருந்த ஆபாச வீடியோ காட்சிகளை வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம், கே.ஆர்.தொப்பூர், கோனகாபாடியைச் சேர்ந்தவர் தேவி, 27. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவரை, தாரமங்கலம், கருக்கல்வாடியைச் சேர்ந்த பூபதி, தன் வலையில் வீழ்த்தி கற்பழித்தார். புகாரை அடுத்து, தாரமங்கலம் போலீசார், பூபதியை கைது செய்து சிறையில்...
தமிழரசுக்கட்சி சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் நால்வரையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்து ஓரங்கட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இரகசிய புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Thinappuyal -
எதிர்வரும் காலங்களில் அரசாங்கம் ஆயுத, அரசியல் வழியாக வந்த கட்சிகளை புறந்தள்ளி தமிழரசுக்கட்சியை மட்டும் சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோரை மாத்திரம் வைத்து வழிநடத்துவதற்கான இரகசிய ஆலோசனைகள் ஜனாதிபதியுடன் நடைபெற்று வருவதாகவும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அமையப்பெறுகின்ற பட்சத்தில் தமிழரசுக்கட்சி ஒரு வலுவான நிலையை அடையும். இதனூடாக ஆயத கலாச்சாரமற்ற ஒரு கட்சியை நிலைநிறுத்துவதன் ஊடாக அரசாங்கம் நாடளாவிய ரீதியில் வெற்றி காண முடியும் என்பதனையே...
அடுத்த ஆண்டு தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.எதிர்கட்சிகள் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக கோரும் பட்சத்தில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தலை ஒன்றை நடத்த தாம் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.எனினும் தாம் 2016ம் ஆண்டு தேர்தல் நடத்தவே திட்டமிட்டிருந்ததாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் பெரியளவிலான மேதினப் ...
முன்னாள் LTTE போராளிகளுக்கு உரிய வகையில் புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை – சரத் பொன்சேக
Thinappuyal News -
EWS ARTICLES
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு உரிய வகையில் அரசாங்கம் புனர்வாழ்வு அளிக்கவில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உரிய முறையில் புனர்வாழ்வு அளிக்கப்படாத சில முன்னாள் போராளிகளே மீண்டும் ஈழ இராச்சிய கொள்கைகளை பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக வெளிநாடுகளிடமிருந்து பாரியளவில் நிதி உதவி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அந்தப் பணம் உரிய வகையில் பயன்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி...
மன்னார் மறைமாவட்ட ஆயருக்கும்,வடமாகாண மச்ஜிரசுல் உலாமா சபையினருக்கும் இடையில் சந்திப்பு.
Thinappuyal News -
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களுக்கும் வடமாகாண மச்ஜிரசுல் உலாமா சபையினருக்கும் இடையில் நேற்று புதன் கிழமை மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.
நேற்று மாலை 5.30 மணியளவில் இடம் பெற்ற இச்சந்திப்பில் வடாகாண மச்ஜிரசுல் உலாமா சபைத்தலைவர் மௌலவி முபாரக் ரசாபி தலைமையில் சென்ற மன்னார் மாவட்ட மச்ஜிரசுல் உலாமா சபை தலைவர் மௌலவி எம்.அசீம்,சமாதான பேரவையின் தலைவர்...
இலங்கையில் கடும்போக்கு பௌத்த பிக்குகளுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் இடையேயான மோதல்போக்கு மேலும் வலுத்து வருவது போலத் தோன்றுகிறது.
அமைச்சரின் அலுவலத்தில் பொதுபல சேனா உறுப்பினர்கள்
அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அவர்களின் அலுவலகத்துக்குள் புதன்கிழமை காலை பொதுபல சேனா அமைப்பினர் நுழைந்து மாற்றுக் கருத்துடைய ஒரு புத்தபிக்குவை தேடியதால் பெரும் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் இதில் தலையிடும் நிலைமை உருவானது.
பொதுபல சேனாவின் உறுப்பினர்கள் புதனன்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்துக்குள்...