நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையை கையிலெடுத்துக்கொண்டு தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்கின்ற நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமது நெறியாண்மையை வெளிப்படுத்தத் தொடங்கினார். 1947 ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை நடை முறையில் இருந்ததும் மக்கள் வாழ்க்கை நன்கு பரிட்சயமானதுமான பாராளுமன்ற முறைமையினை நீக்கிவிட்டு 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் கீழ் உருவாக்கப்பட்டதே நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை ஆகும்.
அரசயில்...
முல்லைத்தீவு கோபாபுலவு கிராம அபிவிருத்தி சங்க தலைவன் பரமேஸ்வரன் இராணுவத்திற்கு தமிழ் பெண்களை சேர்ப்பதில் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் முடிவடைந்து ஏறத்தாழ நான்கு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இந்த நான்கு வருடங்களும் பொது சமுக செயல்பாடுகளில் இராணுவ தலையீடுகளை எதிர்த்தும், இராணுவ மயப்படுத்தப்படும் சூழலை கண்டித்தும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசங்களில் பல்வேறு பொது சமுக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் போராடிக்கொண்டிருக்கின்றன.
இத்தகைய போராட்டங்களின்...
இலங்கை படைகளினது அச்சுறுத்தல்கள் தடைகளினையும் தாண்டி தமிழ் மக்களுக்கான மனித மாண்போடு கூடிய நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் சாத்வீகப் போராட்டம் ஒன்று இன்று காலை முதல் மன்னார் நகரில் ஆரம்பமாகியுள்ளது. மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இப் போராட்டமானது மாந்தை திருக்கேதீஸ்வரம் மனிதப் படுகொலைக்கு பக்கச்சார்பற்ற நீதியான சர்வதேச விசாரணை...
தான் கண்காணிக்கப்படுவதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க கூறிய குற்றச்சாட்டு ஆதரமற்றது : இலங்கை ஜனாதிபதி!!
Thinappuyal -
தான் கண்காணிக்கப்படுவதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க அவர்கள் கூறிய குற்றச்சாட்டு ஆதரமற்றது என்று இலங்கை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது.
இலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க அவர்கள், தன்னை இலங்கை அரசாங்க உளவுப் பிரிவினர் கடுமையாகக் கண்காணித்து வருவதாக குற்றஞ்சாட்டியதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் பதிலளித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க அவர்கள் சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்களுக்கு கடிதம்...
இலங்கையின் இடம்பெற்ற மோதலில் தமிழ் மாணவர்கள் 7 பேரும் சிங்கள மாணவர்கள் 3 பேரும் என 10 மாணவர்கள் காயமடைந்து அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்திலுள்ள விடுதியில் நேற்று நள்ளிரவு இந்த மாணவர்களுக்கிடையிலான மோதல் இடம்பெற்றுள்ளதாக சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் காவல்துறை கூறுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை வளாகத்தில் நடந்த மாணவர்களுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் போது மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் எதிரொலியாகவே இந்த...
இலங்கை அரசாங்கம் 4 வது ஆண்டாக ஜெனிவாவில் மூச்சு எடுப்பதற்கு அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது : கி.மா.உ. ஜனா!!
Thinappuyal -
ஜெனிவாவிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சென்று நியாயம் கேட்கப் போனால் எங்களை தேசத்துரோகிகள், நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள் என்று கூறுகின்றார்கள். நாங்கள் ஜெனிவாவிற்குப் போவதற்கு காரண கர்த்தா யார்? எங்களை இவ்வளவு துரம் போக வைத்தது யார்? எமது தமிழினத்தின் தேசியப் பிரச்சனையை இந்த அரசு சமஸ்ட்டி முறையில் தீர்து வைத்திருந்தால் நாங்கள் ஏன் ஜெனிவாவிற்குப் போகப் போகின்றோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை...
விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுடன் தொடர்பில் இருந்த இந்த சிங்கள ராணுவ அதிகாரியை (‘ஆர்மி அங்கிள்’) தேடும் முயற்சியில் ஒரு டீம் ஈடுபட, மற்றொரு உளவுப்பிரிவு டீம், நீர்கொழும்பில் அகப்பட்ட விடுதலைப்புலி இணைப்பாளரை (இவர் தற்போது, இலங்கை சிறையில் உள்ளார்) தொடர்ந்து விசாரிக்க தொடங்கியது.
வன்னியில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முடிவுக்கு வர தொடங்கிய அந்த நேரத்தில், நீர்கொழும்பில் சிக்கிய இந்த இணைப்பாளரிடம் இருந்து பல முக்கியமாக தகவல்கள் இலங்கை...
வெள்ளைக் கொடியோடு சரண் அடைந்த விடுதலைப் புலித் தலைவர்களை சிறீலங்கா இராணுவம் இயந்திரத் துப்பாகிகளால் சுட்டுப் படுகொலை செய்த செய்தியை பிரித்தானிய செய்தித்தாள்கள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன.
British newspapers expose cold-blooded killing of LTTE leaders in Sri Lanka (வி.புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதை பிரித்தானிய செய்தித்தாள்கள் அம்பலப்படுத்தின) என்ற தலைப்பில் றொபேட் ஸ் ரீவன்ஸ் என்பவர் ஒரு விரிவான கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை...
அனைத்துலக நாடுகளினதும் பிரச்சினைகளில் ஒன்றுதான் அமெரிக்க நாட்டின் தலையீடாகும். முழு அரபு இராச்சியத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என்பதே அமெரிக்காவின் தற்போதைய இலக்காகும். அதனொரு கட்டமாகவே அமெரிக்காவின் அண்மைக்கால செயற்பாடுகள் அமைகிறது எனலாம். தற்போது அதனது தேவை கருதி பிரச்சினையை இலங்கை பக்கம் திருப்பிவிட்டுள்ளது. அது எவ்வாறெனில் 10 வருடங்களுக்குப் பின்னர் இலங்கையை தனது காலணித்துவ நாடாக மாற்றியமைப்பதற்கான திட்டமாகும். ஆரம்பகாலத்தில் இலங்கை மன்னராட்சிக்கும அதனைத்தொடர்ந்து அந்நியராட்சிக்கு...