ஆசியக் கிண்ணத்தை வெற்றி கொண்டமைக்காக இலங்கை கிரிக்கெட் அணிக்கு விஷேட கொடுப்பனவை வழங்க இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி 100,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில் கலந்துகொள்ள 500,000 டொலர்கள் இலங்கை அணிக்கு வழங்கப்படவுள்ளது. அத்துடன், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் 250,000 டொலர்களும், கிண்ணத்தைக் கைப்பற்றினால் மேலதிகமாக 250,00 டொலர்களும் வழங்கப்படவுள்ளன. மேலும் 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்...
சீனாவில் பியூஜியன் மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் செல்லமாக ஒரு ஆமை ஒன்றை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் ஆமையை தூக்கி அதை முத்தமிட்டு கொஞ்சினார். அப்போது, அந்த ஆமை எதிர்பாராதவிதமாக அவரது உதட்டை இறுக்கமாக கவ்வி கடித்து பிடித்துக் கொண்டது. அதில் இருந்து விடுபட முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. எனவே அவர் வைத்தியசாலைக்கு விரைந்தார். அங்கு டாக்டர்கள் ஒரு வழியாக ஆமையை சரிகட்டி உதட்டில்...
உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரீமியா சுயாட்சி பிரதேசத்தை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி விட்டது. அதை நாட்டுடன் இணைக்கும் திட்டத்திலும் தீவிரமாக இறங்கி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்பட மேற்குலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உதவியை உக்ரைன் இடைக்கால அரசு கேட்டு வருகிறது. எனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை தற்போது கிரீமியா பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ரஷ்யா ராணுவத்தின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்கிறது. போலந்து, ருமேனியா...
சீனாவை சேர்ந்த நபர் ஒருவர், தினமும் 18 மைல் தூரம் நடந்து தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறார். சீனாவின் தென்மேற்கு பகுதியை சேர்ந்தவர் Yu Xukang, இவரது 12 வயது மகன் Xiao Qiang. இச்சிறுவனால் தானாக நடக்க முடியாது, இருப்பினும் தன் மகனுக்கு சிறப்பான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், சமுதாயத்தில் சிறந்த மனிதராக உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் தினமும் 18 மைல் தூரம் நடந்து அவனது...
ஸ்கொட்லாந்தில் பெண்ணின் அருகே, படுத்து உறங்கிய 4 அடி பாம்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கரித்நிவான் என்பவர், 4 அடி நீளம் உள்ள பாம்பை வளர்த்து வருகிறார். இரவு நேரத்தில் இந்த பாம்பு பக்கத்து வீட்டுக்காரரான கரோலினின் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த கரோலினின் அருகில் படுத்து உறங்கியுள்ளது. இதை அறியாத கரோலின் காலையில் கண்விழித்து பார்த்தபோது தான், அருகில் 4 அடி பாம்பு படுத்து...
ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த 54 வயது ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹுங்கம பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஜோதிடர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். ரன்ன பிரதேசத்திற்குச் சென்றிருந்த போது சிறுமியை பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த பாலியல் வல்லுறவு சம்பவம் குறித்து சிறுமியின் சிறிய தந்தை, தாய்...
தேயிலையில் தங்கத்தூளை கலந்து கொண்டு சென்றவர் சென்னை விமானத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து சென்ற ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வழமையாக இலங்கைக்கு சென்று திரும்பும் பயணியாவார். இந்தநிலையில் இவர் தேயிலை தூள் பக்கட்டுக்கள் பலவற்றை தம்முடன் எடுத்து வந்துள்ளார். எனினும் 500 கிராம்களை கொண்ட 6 பக்கட்டுக்களில் தேயிலை தூளுடன் தங்க தூளும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்கத்தூளின் நிறை 1.4 கிலோகிராம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு பின்னால் வைத்து இளைஞனொருவனை குழுவொன்று வாளால் வெட்டியதில், குறித்த இளைஞன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். திருநெல்வேலியினைச் சேர்ந்த வி.பிரசாத்(19) என்ற இளைஞனே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார். குறித்த இளைஞனை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அழைத்துச் சென்ற குழுவினர் வாளினால் வெட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். வடக்கின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த வாள்வெட்டுச் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் உள்ள விடுதியில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.    
காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியை துரிதப்படுத்தும் வகையில் சீனா 10 செயற்கைக்கோள்களை செயல்படுத்தியது. இதையடுத்து, கடந்த புதன்கிழமை சீன செயற்கைக்கோள்கள் தென்சீன கடற்பகுதியில் மர்ம பொருள் மிதப்பதாக படங்களை வெளியிட்டது. பிறகு, மலேசியா மற்றும் வியட்நாமுக்கு இடைப்பட்ட பகுதியில் இவ்விருநாடுகளையும் சேர்ந்த மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் அதுபோன்ற மிதக்கும் பொருள் எதுவும் அங்கு தென்படவில்லை. இந்நிலையில் சீன அதிகாரிகள் தங்கள் செயற்கைக்கோள்கள் தவறாக படங்களை...