தடைசெய்யப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்கின்ற கேள்விக்கு பதிலளித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சரவனபவான் கருத்துத்தெரிவிக்கையில், இலங்கையில் இருந்து இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் தொடர்பில் கண்டன அறிக்கைகள் எதுவும் விடவில்லை. காரணம் என்னவென்றால் வெளிநாட்டில் உள்ளவர்கள் எந்நேரத்திலும் குரல் கொடுக்கலாம். வெளிநாடுகளிலிருந்து குரல் கொடுப்பது என்பது இங்குள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதொன்றாக அமையாது. அந்தந்த நாட்டிற்கு ஏற்ப...
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில், கல்முனைக்குடி ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் இன்று அதிகாலை (13) ஞாயிற்றுக்கிழமை 3.30 மணியளவில் பாரிய வீதிவிபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் சாய்ந்தமருதை சேர்ந்த தமீம் என்பவரின் மனைவி உட்பட அக்கரைப்பற்ரை சேர்ந்த பெண் ஒருவரும் ஸ்தலத்திலேயே மரணித்ததாகவும் கொழும்பை சேர்ந்த ஒருவர்அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானதாகவும் சுமார் 20 க்கு மேற்பட்டோர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை...
    தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணினால் சட்டத்தை உச்ச அளவில் அமுல்படுத்த நேரிடும் எனவும், தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச கடுமையான தொனியில் அறிவிப்பை விடுத்துள்ளார். பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும்: பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக இலங்கையின் நிழல் அரசர் கோத்தாபய அறிவித்துள்ளார். இந்த...
நீண்ட கால யுத்த இடைவெளிக்குப் பின்னர் இலங்கைவாழ் மக்கள் நல்லதொரு விடிவுக்காக காத்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டததில் பகைமைகளை மறந்து அனைவரும் ஒருகுடையின் கீழ் அணிதிரண்டு புதுவருடத்தில் சாந்தி, சமாதானம், சந்தோஷம், சுபீட்சத்தோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொள்வதோடு  இப்புதுவருட தினத்தில் நாடளாவிய ரீதியில் வாழ்கின்ற தமிழ், சிங்கள மக்கள் அனைவருக்கும் இந்த புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தினப்புயல் பத்திரிகை மற்றும் தினப்புயல் இணையத்தளமானது உலகமெங்கிலும் வாழ்கின்ற தமிழ், சிங்கள மக்கள்,  வாசகர்கள், வர்த்தக நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
  வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வெடிவைத்தகல் கிராமத்தில் இடம் பெற்ற மோதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டவர்களின் சடலங்கள் பதவியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதேவெளை இச் சடலங்களின் மரணவிசாரணை நடத்தும் அதிகாரமும்  அனுராதபுரம் நீதிவானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும தெரியவருகின்றது. வவுனியா நெடுங்கேணி சேமமடு வீதியில் உள்ள வெடிவைத்தகல் பிரதேசத்தில்  மக்கள் குடிமனையற்ற  மூன்று உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக...
அணையாத் தீபம் அன்னை பூபதியின் இருபத்தியாறாம் ஆண்டு நினைவுநாளும் நாட்டுப்பற்றாளர் தினமும் டென்மார்க்கில் வையின் நகரத்தில் நினைவுகூரப்பட்டது. பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்கள் திரு. கணேசையா விமலேஸ்வரன் திரு.தம்பிஐயா மார்க்கண்டு திரு.செல்வராசா ஸ்ரெபஸ்ரியன் திரு.மதியழகன் கார்த்திகேசு அவர்களின் திருவுருவ படங்களிற்கு அவர்களின் குடும்பத்தினரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களால் மலர் வணக்கம் சுடர் வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களின் எழுச்சி கானங்களோடு நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து...
நாங்கள் மண் மீது கொண்டிருந்த பற்று காரணமாகவே வருடக்கணக்கில் போரிட்டோம். வடக்கு மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகளே அதற்கு சாட்சியாகும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். வெருகலில் நடைபெற்ற வெருகல் படுகொலை நினைவு தினத்தின் நினைவுரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ஒஸ்லோ உடன்படிக்கையையும் 2002 சமாதான ஒப்பந்தத்தையும் கிழித்தெறிய வழிசமைத்த முதலாவது யுத்த நிறுத்த மீறல்...
நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பினருக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு இராணுவ படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த தகவல்கள் இன்னமும் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்த மோதல் சம்பவத்தில் பிரதான தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒருவரான...