மின்சக்தியினை உருவாக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.
இப்படியிருக்கையில் மேலும் இலகுவான முறையில் மின்சக்தியை பிறப்பிக்கும் வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ச்சிகள் இடம்பெற்றுவருகின்றன.
இவற்றின் வரிசையில் தற்போது தொடுகை முறை மூலம் மின்சக்தியை பிறப்பிக்கக்கூடிய முறை ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்காக விசேட மட்டீரியல் ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.இந்த மட்டீரியல் ஆனது மீள்தன்மை கொண்டதாகவும், பிலிம் ட்ரோல் போன்ற அமைப்பினை உடையதாகவும் காணப்படுகின்றது.
இத் தொழில்நுட்பமானது ஸ்மார்ட் கைப்பேசி மற்றும் டேப்லட் ஆகிய சாதனங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது இச் சாதனங்கள் தொடுகை முறை மூலமே செயற்படுத்தப்படுகின்றன.எனவே இந்த மொபைல் சாதனங்களில் குறித்த தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தின் ஒவ்வொரு தொடுகையின் போதும் மின்கலம் சார்ஜ் செய்யப்படும்.
இது தவிர உடைகள், காலணிகள் என்பவற்றிலும் இத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சக்தியைப் பிறப்பிக்கும் சாத்தியம் தொடர்பிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனை மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.