மொபைல் சாதனங்கள் எங்கும் தற்போது தொடுதிரை தொழில்நுட்பமானது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.எனினும் இதில் காணப்படும் பொத்தான்களை (Buttons) தொட்டு உணர முடியாது.
ஆனால் தரவுகளை உள்ளீடு செய்ய முடியும். தற்போது இவற்றையெல்லாம் தாண்டி தொட்டு உணரக்கூடியதும், மாயை தோற்றத்தை தரக்கூடியதுமான பொத்தான்களை உருவாக்கும் GelTouch எனும் தொடுதிரை உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண ஜெல்லினை விடவும் 25 மடங்கு விறைப்பை உடைய 2 மில்லி மீற்றர் தடிப்பம் கொண்ட ஜெல் படையினை அடிப்படையாகக் கொண்டு இத்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தட்டச்சு செய்யும்போது எதிர்கொள்ளப்படும் சிரமங்கள் பெருமளவில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. |