தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்க அனுமதியளிக்கப்பட வேண்டும் – அமெரிக்கா:-

521

jen-psaki_CI

இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிவில் அமைப்புக்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு;ள்ளமை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தக் கூடாது, ஊடக அறிக்கைகளை வெளியிடக் கூடாது, ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை பாதுகாப்பு அமைச்சு விதித்திருந்தது.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் ஜென் பஸாகீ P(துநn Pளயமi) தெரிவித்துள்ளார்.
இலங்கை மிக நீண்ட ஜனநாயக வரலாற்றைக் கொண்டமைந்த நாடு என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.
கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம் போன்றன முடக்கப்படுவது இந்த ஜனநாயகத்தை பலவீனப்படுத்தக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE