தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொழும்பில் மாபெரும் போராட்டம்!

110

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1,700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனம் புறக்கணித்தமை மற்றும் வேதன உயர்வு வழங்காமை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE