உலகத்தொழிலாளர்களை ஒன்றுசேருங்கள் – புதிய ஜனநாயக மாக்சிச லெணிணிசக்கட்சி
தொழிலாளர்கள் தினமான மே 01 இனை முன்னிட்டு வவுனியாவில் (01.05.2014) இன்று காலை 9.30 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிச லெணிணிசக்கட்சியினரினால் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. இப்பேரணியானது வவுனியா அரச பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு வவுனியா நகரசபை மண்டபத்தை சென்றடைந்தது. அத்தோடு வவுனியா நகரசபை மண்டபத்தில் நா.தேவகிருஸ்ணன் (சமூக நீதிக்கான வெதுஜன அமைப்பாளர்) தலைமையில் சிறப்புரை நடைபெற்றது. ஐக்கியப்பட்ட தொழிலாளர்கள் ஒன்றுபட்ட புரட்சிகர மே தினத்தில் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றுபடும் தேசிய இனங்களின் உரிமைகளை வென்றெடுக்க குரல்கொடுப்போம் என்ற தொனிப்பொருளில் 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக உழைப்பாளர்களே ஐக்கியப்படுவீர்கள் என்ற வாசகங்களை இக்கட்சியினர் இந்த வைபவத்தில் தெரிவித்தனர்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்
வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் உண்மையில் பாராட்டப்படவேண்டியவர்கள். இன்று சமாதானம் என்று கூறிக்கொள்ளும் இலங்கையரசு இன்னமும் தமிழ் மக்களுக்கான ஒழுங்கான முறையில் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படாதுள்ளமை மனவேதனையளிக்கின்றது. குறிப்பாக விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் இத்துறைகளில் எமது நாட்டில் வாழும் தமிழ்மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இனிவரும் காலங்களிலாவது தொழிலாளர் வர்க்கம் தலைநிமிர்ந்து வாழவேண்டும். அதற்கான வழிவகைகளை இவ்வரசு இவ்வாண்டிலாவது ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள், காணி அபகரிப்பு போன்றவையும் இந்த தொழிலாளர் வர்க்கங்களுக்கிடையே நிகழ்த்தப்பட்ட ஒரு விடயமாகும். இவையணைத்தும் இவ்வாண்டில் ஓரங்கட்டப்பட்டு தொழிலாளர் சமுதாயம் நலமுடன் வாழ்வதற்கு இவ்வரசு வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வியர்வை சிந்தும் உழைப்பாளி சிறந்த மனிதனாகின்றான் – வடமாகாண சுகாதார அமைச்சர் திரு.ப.சத்தியலிங்கம்.
உலக தொழிலாளர் வர்க்கத்திற்கு இன்று ஒரு முக்கிய தினமாகும். 8 மணிநேர வேலை செய்யவேண்டும என்ற நிலைப்பாட்டை கொண்டுவந்த இந்த தொழிலாளர் வர்க்கம் இன்று எங்களுடைய நாட்டிலும் எல்லாத்தொழிலாளர்களும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கக்கூடிய வகையில் இந்த நாடு உருவாகவேண்டுமென்றும், அடக்கி ஒடுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கங்களும் எதிர்காலத்தில் சுதந்திரமாக வாழவேண்டும் என்றும், அவர்களுக்கான அனைத்து உரிமைகளும், அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவேண்டும் என்றும் இந்நாட்டில் அதற்கான நிலை உருவாகவேண்டும் எனவும் மே தினவாழ்த்துச்செய்தியில் அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தினப்புயல் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
தகவலும், படங்களும்
இ. தர்சன்