தொழில்நுட்பத்தின் மற்றுமொரு வரப்பிரசாதம்

414

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

மனித வாழ்வில் பயன்படுத்தப்படுவதற்கென தற்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் அனேகமான பொருட்கள் நீண்ட காலம் நிலைப்பதில்லை.

அவற்றுள் சில குறிப்பிட்ட காலத்தின் பின்னர் பாவனைக்கு உதவாமல் போனதும் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படும்.

ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருள் (Material) ஒன்று இவற்றையெல்லாம் தாண்டி நீடித்து நிலைக்கக்கூடியதாக இருக்கின்றது.

இதனை Qing Wang எனும் பேராசிரியரின் தலைமையின் கீழ் இயங்கிய ஆராய்ச்சி குழு உருவாக்கியுள்ளது. இது Self-Healing Material என அழைக்கப்படுகின்றது.

இப் பொருளானது பாதியாக சிதைவடைந்த பின்னரும் தானகவே தன்னைப் பழுதுபார்த்து மீள் புதுப்பித்தலுக்கு உள்ளாகக் கூடிய சிறப்பியல்பினை கொண்டுள்ளது.

நானோ தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பொருள் மீள் தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் சிறப்பியல்புகளை வீடியோவில் பார்த்து அறிந்துகொள்ள முடியும்.

SHARE