தோனிக்கு பதிலாக யார் அணித்தலைவர்: CSK நிர்வாகி வெளியிட்ட தகவல்

94

 

CSK தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன் அணியின் எதிர்கால திட்டம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

பயிற்சியாளரும் தோனியும் சேர்ந்து முடிவு
தற்போதைய அணித்தலைவரான தோனிக்கு பின்னர் யார் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 2024 ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியை தோனியே வழிநடத்துவார் என்றும் காசி விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அணித்தலைவரை தெரிவு செய்ய அவசரப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள விஸ்வநாதன், அணியின் பயிற்சியாளரும் தோனியும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும் என்று நிர்வாகிகள் தரப்பு விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அணித்தலைவர் உட்பட முதன்மையான இரு பொறுப்புகள் குறித்து நாம் விவாதிக்க தேவையில்லை என்றே அணியின் உரிமையாளரான ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளதாக விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

அது சரியாக நடக்கவில்லை
அதை தோனியும் பயிற்சியாளரும் முடிவு செய்யட்டும் என்றும் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர்கள் முடிவை தம்மிடம் தெரிவிக்கட்டும், அதை உங்களுக்கு தெரிவிப்பேன் என ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளதாக விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே முன்பு ரவீந்திர ஜடேஜாவை அணித்தலைவராக முயற்சித்தது, ஆனால் அது சரியாக நடக்கவில்லை, எனவே தோனி மீண்டும் அணித்தலைவராக களமிறங்கினார்.

SHARE