இலங்கையைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன் CSK அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்.
இலங்கை வீரர்
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன் (Kugadas Mathulan) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட குகதாஸ் மதுலன் போட்டி தொடரில் வீசிய யார்க்கர் (YORKER) பந்தை எம்.எஸ்.தோனி பார்த்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைக்க பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வைரல் வீடியோ
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், புனித ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் குகதாஸ் மதுலன் யார்க்கர் பந்து வீசி விக்கெட்டை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.