த்ரிஷாவின் மாஸ்டர் பிளான்!

796

 

சில வருடங்களுக்கு முன்புவரை தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருந்தார் த்ரிஷா. முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்ட த்ரிஷாவை அண்மைக்காலமாக எல்லா ஹீரோக்களுமே ஒதுக்க ஆரம்பித்துவிட்டனர். எனவே, கன்னடப் படங்களில் நடிக்கும் அளவுக்கு த்ரிஷாவின் மார்க்கெட் கவலைக்கிடமாகிவிட்டது. எனவே இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாரம் த்ரிஷா. அதற்காக புதிய டெக்னிக்கையும் கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறாராம்.
அதாவது, இளம் ஹீரோக்களை டார்கெட் வைத்து அவர்களை நெருங்கி வருகிறார் த்ரிஷா. அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி இளம் ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாகி வாய்ப்பை வாங்கிவிடலாம் என்பதே த்ரிஷாவின் திட்டமாம். அதன்படி, அதர்வா, கௌதம் கார்த்திக், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரை டார்கெட் வைத்து, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களை வெளிப்படையாக புகழ ஆரம்பித்திருக்கிறார்.
இப்படி புகழ்வதால் என்ன லாபம்?
இருக்கிறது…இளம் ஹீரோக்களை புகழ்வதன் மூலம் அவர்களின் பார்வை தன் பக்கம் திரும்பும், அதை வைத்து அவர்களது படங்களில் கதாநாயகி வாய்ப்பை வாங்கிவிடலாம் என்பதே த்ரிஷாவின் திட்டம்.
யப்பா! என்னமா பிளான் போடுறாங்க பாருங்க!
SHARE