அஞ்சான் பட போஸ்டரில் சூர்யா சமந்தாவின் காலை பிடித்திருப்பதை பார்த்த மகேஷ் பாபு ரசிகர்கள் இது மட்டும் என்னவாம் என்று கேட்டனர். இந்த போஸ்டர் பிரச்சனையால் மகேஷ் பாபுவும், சமந்தாவும் முகம் கொடுத்து பேசிக் கொள்வது இல்லை என்று கூறப்பட்டது.சென்னையில் நடந்த பிலிம்ஃபேர் விருது விழாவுக்கு மகேஷ் பாபு வந்திருந்தார், சமந்தாவும் வந்திருந்தார். மகேஷ் பாபுவை பார்த்த சமந்தா அவர் இருக்கைக்கு அருகில் சென்று பேசினார். இருவரும் கன்னத்தில் முத்தமிட்டு ராசியாகிவிட்டனர்.விழாவில் சிறிது நேரம் மகேஷ் பாபு அருகில் சமந்தா அமர்ந்திருந்தார். இதன் மூலம் நாங்கள் ராசியாகிவிட்டோம் என்று ரசிகர்களுக்கு சொல்கிறார் போல சமந்தா.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த ஒரு நகை கடை திறப்பு விழாவில் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சம்ந்தா தனது தொப்புள் மற்றும் வயிறு தெரியும்படி கவர்ச்சி உடையில் கலந்து கொண்டார். கடையில் திரண்டு இருந்த பலரது கண்களும் அவரது கவர்ச்சி பகுதியை மொய்த்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை.
வெளியில் சமந்தாவை காண பெரும் கூட்டம் இருந்தது. நல்லவேளையாக அவர்களிடம் சிக்கவில்லை. பாதுகாவலர்கள் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பிவிட்டனர்.