திரையுலகில் நகைச்சுவைக்கு பேர்போன நடிகர்களில் ஒருவர் செந்தில். 1979ல் இருந்து தனது திரை பயணத்தை துவங்கிய நடிகர் செந்திலுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தது.
சிலருடைய நகைச்சுவை சில காலங்கள் மட்டுமே நம்மை சிரிக்க வைக்கும். அதன்பின் அதை நாம் மறந்துவிடுவோம். ஆனால் என்றுமே நம்மால் மறக்கவே முடியாத நகைச்சுவையை கொடுத்த நடிகர்களில் ஒருவர் தான் செந்தில்.
அதுவும், கவுண்டமணியுடன் சேர்ந்து செந்தில் செய்யும் நகைச்சுவை எல்லாம் எப்போது பார்த்தாலும் புதிதாக இருக்கும். குறிப்பாக வாழைப்பழ நகைச்சுவையை கூறலாம். இன்றும் அந்த காமெடியை எத்தனை முறை பார்த்தாலும் வயிறு குலுங்க நாம் சிரிப்போம்.
பேரன் பேத்தியுடன் செந்தில்
இந்த நிலையில், செந்தில் தனது பேரன் மற்றும் பேத்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆம், மகிழ்ச்சியாக தனது பேரன் பேத்தியுடன் வாழ்ந்து வரும் நடிகர் செந்திலின் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.