தமிழ் சினிமா ரசிகர்கள் முக்கியமாக கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் தான் கவுண்டமணி.
நகைச்சுவை காட்சிகளில் வெறும் சிரிக்க வைக்கும் வசனங்களை மட்டும் வைக்காமல் முற்போக்கு கருத்துக்களும் இருக்கும். அவருக்கு அடுத்து வந்த எல்லா காமெடி நடிகர்களுக்கும் அவரின் டச் கண்டிப்பாக இருக்கும்.
நகைச்சுவை மூலம் எந்த அளவிற்கு மக்களை கவர்ந்தாரோ அதே அளவிற்கு பிரச்சனைகளையும் சந்தித்தவர். இப்போது அவர் மிகவும் உடல்எடை மெலிந்து நடக்ககூட முடியாமல் இருக்கும் சில வீடியோக்களை பார்த்து மக்கள் மிகவும் மன வேதனை அடைந்தனர்.
சீக்ரெட் என்ன
கவுண்டமணி, இந்த காலத்தில் அஜித் எப்படி இருக்கிறாரோ அதேபோல் அந்த காலத்தில் இருந்துள்ளார். அதாவது பட புரொமோஷன்களில் எப்போதும் கலந்துகொள்ளாதவர், முக்கியமாக தனது குடும்பத்தை மீடியா வெளிச்சத்திற்கு காட்டாமல் வைத்திருப்பவர்.
சில வாரங்களுக்கு முன்புகூட கவுண்டமணி மகளின் புகைப்படம் ஒன்று வெளியாகி ட்ரெண்டானது. அதை தவிர்த்து அவரது குடும்பம் பற்றிய எந்தத் தகவலும் பெரிதாக யாருக்கும் தெரியாது.
அவரைப் பொறுத்தவரை திரையில் இருக்கும் கவுண்டமணியை மக்கள் தெரிந்துகொண்டால் போதும், அசல் கவுண்டமணியை தெரிந்துவைத்து மக்கள் எனன் செய்யப்போகிறார்கள் என்ற கொள்கையில் இருப்பவர்.
முக்கியமாக மக்களின் நேரத்தை வீணடிக்க்க வேண்டாம் என்றும் நினைப்பவர். இதனாலேயே கவுண்டமணி தனது குடும்பத்தை மீடியா பக்கம் காட்டாமல் இருந்தார் என்று பத்திரிக்கையாளர் ராஜ கம்பீரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.