நடிகர் சந்தானமா இது, திருமணத்தின் போது அடையாளமே தெரியாமல் எப்படி உள்ளார் பாருங்க- வைரல் போட்டோ

106

 

சின்னத்திரையில் களமிறங்கி சாதிக்க துடிக்கும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சந்தானம்.

விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா மூலம் அதிகம் பிரபலமான இவர் அப்படியே வெள்ளித்திரைக்கு வந்து ஒரு காலத்தில் அவர் இல்லாமல் எந்த புதிய ரிலீஸ் படங்களுமே இல்லை என்ற அளவிற்கு இருந்தது.

அப்படி பிஸியாக காமெடியனாக பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை அனைவரின் படங்களிலும் நடித்தார். காமெடியன் டிராக்கில் இருந்து இப்போது ஹீரோவாக நடிக்க தொடங்கி அதிலும் கலக்கி வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. அடுத்து சந்தானம் நடிப்பில் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

திருமண போட்டோ
எல்லா பிரபலங்களின் குடும்ப புகைப்படங்கள் நிறைய சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. ஆனால் சந்தானத்தின் மனைவி மற்றும் பிள்ளைகளின் புகைப்படங்கள் அவ்வளவாக வெளியானது இல்லை.

இந்த நிலையில் நடிகர் சந்தானத்தின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

SHARE