நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி தாறுமாறு ஹிட்டானது. படம் நல்ல லாபத்தை கொடுக்க ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சம்பளத்தை தாண்டி தயாரிப்பு குழு சிறப்பாக கவனித்தார்கள். அப்படத்தை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் தான் லால் சலாம். விஷால் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த படத்தை மிஸ் செய்துள்ள சிம்பு- என்ன படம் தெரியுமா? விஷால் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த படத்தை மிஸ் செய்துள்ள சிம்பு- என்ன படம் தெரியுமா? கிரிக்கெட்டை மையமாக கொண்டு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் படு பிரம்மாண்டமாக நடந்தது. வருகிற பிப்ரவரி 9ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா? | Lal Salaam Movie Rajinikanth Salary Details ரஜினி சம்பளம் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ளார். சிறப்பு வேடத்தில் நடிப்பதற்காக ரஜினி ரூ. 40 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

69

 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸின் தீம் பாடலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது.

சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், ‘ஹார்ட் பீட்’ சீரிஸின் சாரத்தையும் அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ‘ஹார்ட் பீட்’ சீரிஸ் இளைஞர்களைக் கவரும் வகையில் நட்பு, ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த கலக்கலான பொழுதுபோக்கு சீரிஸாக இருக்கும்.

ந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தத் சீரிஸை A Tele Factory நிறுவனம் தயாரிக்கிறது, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த சீரிஸுக்கு சரண் ராகவன் இசையமைக்க, விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.

இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

SHARE