நடிகர் விஜய்யுடன் கைகோர்க்கிறாரா விவாகரத்தான 36 வயது நடிகை.. சூப்பர்ஹிட் ஜோடி யாச்சே

112

 

விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

Goat படத்திற்கு பின் விஜய் நடிக்கவிருக்கும் கடைசி திரைப்படம் தளபதி 69. இதன்பின் அவர் அரசியலில் முழு நேரத்தை செலவிடப்போவதாக கூறியுள்ளார். தளபதி 69 படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து தொடர்ந்து பலவிதமான செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது.

அட்லீ, கார்த்திக் சுப்ராஜ், வெற்றிமாறன் சமீபத்தில் ஆர்.ஜே. பாலாஜி என பல் இயக்குனர்களின் பெயர் இதில் கூறப்பட்டது வரும் நிலையில், யார் இயக்கப்போகிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளிவரவில்லை.

தளபதி 69 ஜோடி
இந்நிலையில், லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், அட்லீ தான் தளபதி 69 படத்தை இயக்கப்போவதாகவும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப்போவதாகவும் கூறப்டுகிறது. மேலும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கப்போகிறார் என்பது தான். ஆம், கத்தி, தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த சமந்தா மீண்டும் தளபதி 69ல் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என லேட்டஸ்ட் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், இது எதுவுமே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE