நடிகையை காதலிப்பது பாவமல்ல : காஜல் காட்டம்!!

813

Kajalபொம்மலாட்டம் படத்தில் நடிக்கத் தொடங்கிய காஜல்அகர்வால், அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடித்து வந்தார்.

அப்போதெல்லாம் அவரைப்பற்றி எந்த கிசுகிசுக்களும் பரவவில்லை. ஆனால், தெலுங்கு படங்களில் நடிக்க அவர் ஐதராபாத்தில் முகாம் போட்ட பிறகுதான் அங்குள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். அந்த செய்தி காட்டுத்தீயாய் பத்தி எறிந்தது.

அதனால் ஆந்திராவில் தொடர்ந்து முகாமிட்டிருந்தால், எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையாகி விடும் என்று ஒரு மாற்றத்துக்காக கோலிவுட்டுக்கு வந்தார் காஜல்.

அந்த நேரம் சில முன்னணி ஹீரோக்களின் படங்களும் கிடைத்ததால் சென்னையிலேயே தங்கி விட்டார். அதையடுத்து ஆந்திராவுக்கு மீண்டும் அவர் சென்றபோது, பழைய தொழிலதிபர் சர்ச்சை காணாமல் போயிருந்தது. அதனால் நிம்மதியடைந்தார் நடிகை.

ஆனால் அவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது ஒரு நபருடன் ஊர் சுற்றிய போட்டோக்கள் வெளியாக, மீண்டும் அதே தொழிலதிபர் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

இருப்பினும் இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வந்த காஜல்அகர்வால், தற்போது சில பதில் கொடுத்துள்ளார். அதில், நடிகைகள் காதலிப்பது ஒன்றும் பெரிய பாவச்செயல் அல்ல. நடிகைகளுக்கும் மனசு உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள காஜல், தான் தொழிலதிபரை காதலிக்கவில்லை என்று மறுப்பு சொல்லவில்லை.

மாறாக இன்னும் மூன்று ஆண்டு கழித்து என் திருமணம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

SHARE