நடிகை இஷா கோபிகர் கேள்வியால் கடுப்பான அஜித் ரசிகர்கள்

318

நடிகர் அஜித் இன்னும் சினிமாவில் நடிக்கிராறா என்று நடிகை  இஷா கோபிகர் கூறியது கடும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. இந்த கேள்வியால் நடிகை இஷா கோபிகரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நடிகர் விஜயகாந்துடன் நரசிம்மா, விஜயுடன் நெஞ்சினிலே மற்றும் அரவிந்த்சாமியுடன் என் சுவாசக் காற்றே ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை இஷா கோபிகர். மேலும் இவர் தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் சில படங்கள் மட்டும் நடித்த இவர் பல வருடங்களாக எங்கெ இருக்கிறார் என்றுகூட தகவல் வெளியாகவில்லை . இந்நிலையில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் மீண்டும் தமிழில் கம் பேக் ஆக உள்ளார்.

இந்நிலையில் இவர் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது ‘ சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு நடிகர் ரஜினி நினைவுக்கு வருகிறார். என்னுடன் நடித்த நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் முதலிடத்தில் இருக்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரவிந்த் சாமி எனக்கு பிடித்த நடிகர்’’ என்று தெரிவித்துள்ளார்

இதைத்தொடர்ந்து இவரிடம் நடிகர் அஜித் பற்றி கேட்டபோது ’அஜித் இன்னும் நடிக்கிறாரா’ என்று கேட்டுள்ளார். இந்த கருத்து அஜித் ரசிகர்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதனால் நெட்டிசன்கள் அவரை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

SHARE