நடிகை காஜல் அகர்வால் திருமணமாகி செட்டில் ஆன பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். குழந்தை பெற்ற பிறகு மீண்டும் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து முடித்திருக்கிறார்.
தகாத முறையில் தொட்ட நபர்
காஜல் அகர்வால் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவருடன் செல்பி எடுக்க அதிகம் ரசிகர்கள் முயற்சித்து இருக்கின்றனர்.
அதில் ஒருவர் எல்லைமீறி அருகில் சென்று காஜல் இடுப்பில் கை வைத்து இருக்கிறார். அதனால் காஜல் அதிர்ச்சியாகி ரியாக்ட் செய்ய அந்த நபர் தள்ளி சென்று இருக்கிறார்.