தேசிய விருது வென்ற தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
மேலும் தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி, அட்லீ தயாரிப்பில் உருவாகும் பேபி ஜான் என்ற படத்தில் கதாநாயகியாக இந்தியில் அறிமுகமாகிறார். இப்படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
2024ஆம் ஆண்டில் நடிகர், நடிகைகளின் சொத்து மதிப்பு விவரம் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் தற்போதைய சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 45 கோடி வரை இருக்குமாம். இவர் ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சென்னையில் உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் வீட்டின் மதிப்பு ரூ. 6 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் பயன்படுத்தி வரும் கார்கள், Brand-new Volvo S90 – ரூ. 60 லட்சம், BMW 7 Series 730Ld – ரூ. 1.38 கோடி, Mercedes Benz AMG GLC43 – ரூ. 81 லட்சம்,Toyota Innova Crysta – ரூ. 25 லட்சம்.